ஆதிபராசக்தி மன்றத்தின் முன் நின்ற…ஒரு நாய் திடீரென சுருண்டு விழுந்து துடிக்க….,

அதைபார்த்த தொண்டர்கள்….,
மன்ற கலசதீர்த்தத்தை நாயின் வாயில் ஊற்றி அதன் காதில் மூல மந்திரம் சொன்னார்கள்…..!!

தீர்த்தம் குடித்த அந்த நாய் சில நொடிகளில் உயிரை விட்டது….!!

இதை கண்ட மன்ற தொண்டர்கள் அதிர்ந்து போயினர்….!!

அந்த ஜீவனை காப்பற்றத் தானே அம்மாவின் கலச தீர்த்தம் தந்தோம்….!!

ஆனால் இறந்து விட்டதே… என …..
மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்….!!

அம்மாவின் படத்தின் முன் நின்று சிலர் புலம்பி தீர்த்தனர்……!!

இரண்டு தினங்கள் கழித்து மன்ற சக்தி ஒருவர் கனவில் அம்மா அந்த இறந்த அந்த நாயின் கதையை……,

கனவில் சொல்லி புரியவைத்தார்கள்…..!!

அம்மா கனவில் சொன்ன அந்த சம்பவம்:
““““““““““““““““““““
5000 வருடங்களுக்கு முன்பு தேவலோகத்தில் பெரிய யாகம் ஒன்று நடந்தது…..!!

பல ரிஷிகள் கலந்து கொண்டார்கள்……!!

அதில்…
தேவலோக ரிஷிகளும்….,
அசுர குலத்து ரிஷிகளும் கலந்து கொண்டார்கள்……!

தேவரிஷி ஒருவர் பயபக்தியோடு தெளிவாக மந்திரம் சொல்லி…….,

யாககுண்டத்தில் ஆகுதி அளித்தபடி இருந்தார்…..!!

அசுர குல ரிஷி ஒருவர்….,

அந்தத் தேவரிஷி உச்சரித்த மந்திர உச்சாடனத்தைக் கேட்டு…….,

பொறாமை கொண்டு…..,

நாய் ஒன்று உறுமுவது போல…..,

உறுமியபடி பரிகாசம் செய்தபடி இருந்தார்…..!!

யாகம் முடிகிறவரை பொறுமையுடன் இருந்த தேவரிஷி……,

யாகம் முடிந்த பிறகு அந்த அசுர குல ரிஷியை நோக்கி…..,

“அட நீசனே..….!!
தெய்வ யாகத்தில் கலந்து கொள்பவன்……,

எப்படி அடக்க ஒடுக்கமாகப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற……,

அடிப்படை கூட உனக்குத் தெரியவில்லையா……?

என்ன அவமதித்தாய்…..!!

யாகபூஜையை அவமதித்தாய்…….!!

நாய் உறுமுவது போலப் பரிகாசம் பண்ணினாய் அல்லவா….…?

நீ நாயாகவே ஜென்மம் எடுத்து அலைவாய் என்று சாபமிடுகிறேன் போ…….!!

என்று கோபத்துடன் சாபமிட்டார்……!!

அந்தத் தேவரிஷி தவபலம் மிக்கவர்…..!!!

முக்காலமும் உணர்ந்தவர்.

ஆதலால்….,
பயந்து போன அசுரகுல ரிஷி…..,
ஐயனே….! மன்னித்து விடுங்கள்…..!!

மனம் வைத்து சாப விமோசனம் கொடுங்கள்….!! என்று மன்றாடினார்.

“5000 வருடம் கழித்து…..,

ஜகன் மாதா ஆதிபராசக்தி பூலோகத்தில் அவதாரம் செய்யப் போகிறாள்……!!

அப்போது 108 சக்தி பீடங்கள் நிறுவப் போகிறாள்…….!!

அந்தச் சக்திபீடங்கள் ஒன்றில் நாய் ஜென்மம் எடுத்து நிற்கப் போகிறாய்……!!

அங்கே தான் உனக்கு சாபம் நீங்கும்……!!

சாபம் நீங்கிய பிறகே மீண்டும் இந்தத் தேவலோகத்துக்கு வந்து சேருவாய்…..!!
என்றார் தேவரிஷி…..!!

தேவரிஷியின் சாபப்படி 5000 வருடம் அலைந்து திரிந்த……,

அந்த ஆன்மா [ கோவை மாவட்டம் சுந்தராபுரம் ]…. ஆதிபராசக்தி மன்றத்தில் வந்து நின்றதாலும்,

நீங்கள் மூல மந்திரம் சொல்லிக் கலச தீர்த்தம் ஊட்டியதாலும்…..,

சாபம் நீங்கியது…..!!

அந்த ஆன்மாவுக்கு நற்கதி கிடைத்தது…….!!

என்று மன்ற மகளிர் சக்தியின் கனவிலேயே அம்மா விளக்கம் கொடுத்தார்கள்…..!!

அந்த அசுர ரிஷி சாபம் நீங்கி மோட்சம் பெற்ற அந்த மன்றம்…….,
[கோவை மாவட்டம் சுந்தராபுரம் ]….

தற்போது அம்மாவின் அருளாசியால்…
சக்திபீடமானது……!!