சட்டி சுட்டதடா!

தோ சில பரிகாரம் கூறுகிறாள். அவர்களும் குறை தீர்ந்தவுடன் “சட்டி சுட்டதடா! கை விட்டதடா!” என்ற முறையில் அன்னையை மறந்து விடுகிறார்கள்.

இவர்கள் விரும்புவது வேறு…….. ஆனால், ஆன்மிகத் துறையில் முன்னேற வேண்டும் என்று அன்னையிடம் வரும் ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் முழு நம்பிக்கையும் அதன் விளைவாகிய சரணாகதியும் அவசியம் தேவை. ஒரு நாள் இரண்டு அன்பர்களுக்கு அன்னை கூறிய உபதேச மொழிகள் பின்வருமாறு: இருவர் இருப்பினும் அன்னையின் சொற்கள் குறிப்பாக ஒருவருக்கே பேசப் பெற்றன. என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். அன்னை கூறினாள்: “மகனே! என்னை நினைத்துத் தியானம் செய்ய உட்காருகிறாய். கண்ணை மூடியவுடன் காட்டில் இருக்கிற உணர்ச்சி தோன்றுகிறது. புலி, சிங்கம், சிறுத்தை முதலியன (உலகத் துன்பங்கள்) உன்னையே தின்றுவிடத் தயாராய் இருப்பது போல் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. காரணம் என்ன தெரியுமா? என் மேல் கொண்டுள்ள பக்தி உறுதிப்படவில்லை. ஆகையால் இந்தக் கொடிய வனவிலங்குகள் உன் மேல் பாய நேரம் பார்த்துக் கொண்டிருப்பதை நீ அறிய முடிகிறது. என்மேல் உறுதியான நம்பிக்கையுடன் கண்ணைத் திறந்து பார்! அந்த வனவிலங்குகள் ஓடி ஒழிந்து கொள்ளும் என்பதை நீயே உணர முடியும்.” அன்னையின் அருள்வாக்கு.
]]>