?சரபர் நரசிம்மரின் பாதங்களை பிடித்து இரண்டாகக் கிழிக்க முயன்றபோது நரசிம்மத்தின் கோபம் மறைந்து சாந்தம் தவழ்ந்தது. நரசிம்மத்துக்கும் சரபத்துக்கும் 18 நாள் உக்கிரமான போர் நடைபெற்றதல்லவா? அப்போது சரபத்தை எதிர்க்க நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவை வடிவம் எடுத்தார். சரபப்பறவைக்கு விரோதி கண்ட பேருண்டம் என்ற பறவை ஆகவே, அந்த பறவை வடிவம் தாங்கி நரசிம்மர் போரிட்டார். அதனால் சரபருக்கு மேலும் கோபம் கொப்புளித்தது. *அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப்பிரத்தியங்கரா என்று பத்திரகாளி உதித்தாள்.* அப்படி உதித்த அவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கிவிட்டாள். *சரபருக்கு சக்திகளாக விளங்குபவர் இருவர்.* *1) பிரத்தியங்கரா,* *2) சூலினி.* *சரபர் நரசிம்மத்தை அடக்குவதற்கு உதவியாக அவதரித்தவள் பிரத்தியங்கரா! அவளே பத்ரகாளி! அவளே அதர்வண பத்ரகாளி!* ?அதர்வண பத்ரகாளிக்கு ஆயிரம் முகங்கள்! இம்முகம் எல்லாம் சிங்கம் முகம் போலவே இருக்கும். *இரண்டாயிரம் கைகள்! பெரிய உடம்பு! கரிய நிறம்! நீல ஆடை! சூலம், கலாபம், பாசம், தமருகம் என்பன இவள் ஏந்தியுள்ள ஆயுதங்கள்.* இந்தத் தேவியை மனக்கண்ணால் மேற்கண்ட தோற்றங்களோடு தியானித்தால் எப்படிப்பட்ட பகைவனும் அழிவான்; சத்ருபயம் நீங்கிவிடும். தக்கன் வேள்வியை அழித்துவிட்டு வரும்படிச் சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியபோது, அவருக்குத் துணைநின்று உதவியவள் பிரத்தியங்கரா தேவியே! இவளை உபாசித்து இவள் அருளை மட்டும் பெற்றுவிட்டால் போதும், அப்புறம் இராம இலக்குவர் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை தெரிந்துகொண்டதால்தான் இந்திரஜிந் ‘நிகும்பலை’ என்னும் இடத்தில் மிக ரகசியமாக இவளை வேண்டி யாகம் செய்தான். அதனை ஜாம்பவான் மூலம் தெரிந்துகொண்ட அனுமன் தொடக்கத்திலேயே அந்தயாகம் நல்லபடி முடியாதவாறு அழித்து முளையிலே கிள்ளி எறிந்து விட்டான். மகாவிஷ்ணு மது கைடபர் என்ற அரக்கர் இருவரை அழிக்கத் துணை நின்றவள் இந்தத் தேவியே. இவளுடைய மந்திரத்தைக் கண்டு பிடித்தவர்கள் இரண்டு ரிஷிகள் 1) அங்கிரஸ் 2) பிரத்தியங்கிரஸ். இந்த தேவி பற்றி ரிக்வேதத்தில் மந்திரங்கள் உண்டு. இவளை வழிபடும் மூலமந்திரம் இருபது அட்சரங்கள் கொண்டது இவளை வழிபடும் மாலா மந்திரம் பிரபஞ்ச சார தந்திரம் என்ற நூலில் உள்ளது. இந்தத் தேவிக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் எனவே இவளை இந்த வடிவத்தில் சிற்பமாக வடித்து வழிபட முடியாது. *தாருகன் என்ற அரக்கனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கரா தேவியே!* தாருகன் என்ற அசுரன் தன் இரத்தம் கீழே சிந்தினால் ஆயிரம் அசுரர்கள் தோன்றுமாறு வரம் பெற்றிருந்தான். இவன் சாகாவரம் கேட்டிருந்தானே தவிர பெண்களை அலட்சியம் செய்தான். ஒரு பெண் மூலம் தனக்கு அழிவு வரலாம் என்று இவன் நினைக்கவே இல்லை எனவே இவனைக் கொல்ல ஆறு தேவர்கள் தங்கள் சக்திகளை ஒன்று திரட்டினர். *1) விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவி 2) பிரம்மாவின் சக்தி பிராமி 3) சிவனது சக்தி மகேஸ்வரி 4) குமரனின் சக்தி கெளமாரி 5) இந்திரனின் சக்தி இந்திராணி 6) எமனுடைய சக்தி வராகி 7) சாமுண்டி என்ற ஏழு சக்திகள் இணைந்து தாருகனை அழித்தன*. இந்த ஏழு சக்திகளின் அடையாளங்களே அதர்வண பத்ரகாளியின் மேல் உள்ள ஏழுதலை நாகங்கள் எனக் கருதலாம். ( ஆதாரம் : சரபேஸ்வர சர்வஸ்வம் பிரத்தியங்கரா பிரபாவம் – நஜன் – பிரதிபா பிரசுரம் ). *இவ் அதர்வண பத்ரகாளியின் முக்கியத்துவத்தினை திருமதி அம்மா அவர்கள் இம்மாத சக்தி ஒளி ( September 2017) புத்தகத்தில் #அருள்_தருவாள்_அன்னை_அதர்வண_பத்ரகாளிஎன்னும் தலைப்பின் கீழ் தெரிவித்துள்ளார்கள்.*]]>