எனக்கு அன்னை செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லும் முன் ஒரு சின்ன செய்தியை முதலில் சொல்லிவிடுகிறேன். அன்னை எனது கனவில் ஒரு மூதாட்டியாக வந்து ஒரு பையில் விபூதியும், குங்குமமும் கொடுத்து “மகனே உன்னை நாடி வருபவர்களுக்கு இதைக் கொடு! அவர்கள் நலம் அடைவார்கள் என்று சொன்னார்கள் . நானும் அன்னையை வணங்கி, அன்னையின் சக்திமிக்க மந்திரங்களான அடிகளார் 108, அன்னை 108 மந்திரங்களை சொல்லி திருஷ்டி எடுத்து அன்னையின் பிரசாதம் கொடுப்பேன். அனைவரும் உடனே நலம் பெற்று விடுவார்கள் ! என்னே அம்மாவின் அருள் !

ஒருநாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னைக் காண வந்தார். அவர் ஏற்கனவே அன்னைக்கு சக்தி இருமுடி செலுத்தியவர். அவர் என்னிடம் தனது சேலையை முழங்காலுக்கு மேல் தூக்கிக் காட்டினார். முழங்காலின் மேற்பகுதியிலிருந்து கணுக்கால் வரை நரம்புகள் பச்சை பச்சையாக சுருண்டு இருந்தது. என்ன விபரம் என்று கேட்டேன். அந்தப் பெண் நானும் நரம்பு டாக்டர் யார் யாரிடமோ சென்று காட்டிவிட்டேன். என் தகுதிக்கு மீறி வட்டிக்கு வாங்கி செலவு செய்துவிட்டேன். ஆனால் வலி மட்டும் நின்றபாடில்லை! நீங்கள் தான் அம்மாவை நினைத்து மந்திரித்து எனக்கு நல்ல வழி காட்டவேண்டும் என்று தாயும்-மகளும் “ஓ” என்று அழுதார்கள் . நானும் அன்னையின் மேல் பாரத்தைப் போட்டு மந்திரங்கள் சொல்லி திருஷ்டி எடுத்து முக்கூட்டு எண்ணெயை கொடுத்து, அன்னையை நினைத்து மூலமந்திரம் சொல்லி மனமுருகி வேண்டி, அவளே சரணம் என்று சரணாகதி அடைந்து இந்த எண்ணெயை 18 நாட்கள் பூசி வாருங்கள் ! அம்மா நல்லது தருவாள் என்று கொடுத்துவிட்டேன். என்னே ஆச்சரியம்! எண்ணெயை தேய்க்க ஆரம்பித்த 6ம், 7ம் நாளே வலிகள் குறைந்து சுருண்ட நரம்புகள் நன்றாக ஆக ஆரம்பித்து, நொண்டி நொண்டி நடந்த பெண் நன்றாக நடக்க ஆரம்பித்தார். அன்னையின் கருணையும், சக்தியும் எண்ணி எண்ணி தாயும், மகளும் கண்ணீர் விட்டனர்.