கிணற்றில் நூறுஅடித் தண்ணீர் இருப்பினும் அதனைக் கானல் நீராக மாற்றி கீழே பஞ்சு மெத்தை விரித்து நீ விழும்போது எவ்வித இடையூரும் நேராதபடிக் காப்பேன். ஏன் தெரியுமா? என்னுடைய ஆணையை நிறைவேற்றுகிறாய் நீ. என் ஆணையின் பலாபலன்களைப் பற்றி சிந்திக்காமல் ஆணையை உடனே நிறைவேற்றிய உன்னை காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையதாகி விடுகிறது. எந்த நிலையிலும் உன்னை எப்படியாவது காப்பாற்றியே தீருவேன். என்னை முழுவதுமாக நம்பினவர்களை எந்த நிலையிலும் நான் கைவிடமாட்டேன். முழுவதுமாக என்னைச் சரணடைந்து விட்டவனுடைய குடும்பமும் என் பொறுப்பில் வந்துவிடுகிறது. என்னைச் சரணம் அடைந்துவிட்ட ஒருவன் காரணமாக அவன் குடும்பம் முழுவதையும் தாங்குகிறேன்” அன்னையின் அருள்வாக்கு

]]>