பார்வையினால், அந்த மனிதனின் உடம்பில் உள்ள 108 வர்மங்களில் ஏதாவதொன்றில் தாக்கிவிடுகிறது. தீய பார்வையினால் பக்தன் பாதிப்படைகிறான். மனிதனுக்கு உடல் பாதிப்பு, மனவேதனை உண்டாகிறது. இதற்கு வர்மதிருஷ்டி என்று பெயரடா மகனே! தீய பார்வையினால் பாதிக்கப்பட்ட மகனோ எந்த விஞ்ஞானத்தாலும் பாதுகாக்க முடியாமல், நோயின் காரணமும் அறியாமல். தெரிந்தோ தெரியாமலோ என்னிடம் வருகிறான் மகனே! மகனே! அடிகளாரின் பார்வைபட்ட மாத்திரத்திலேயே வர்ம திருஷ்டி அடைந்தவா்கள் குணமாகிவிடுகின்றனா். பாலகனுக்குப் பார்வை வர்மம் தெரியும் மகனே! அதற்கு மூலமே அவன் தான் மகனே! பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே குணம் ஏற்படும். உயா்ந்த கலையாகிய வர்மக்கலை சில தீயவா்களினால், தீமையான பலனைத் தருகின்றது.

இன்று பாலகனின் பார்வைக்கு மட்டுமே, வர்ம திருஷ்டியைப் போக்கும் ஆற்றல் உண்டு. வேறு எவருக்கும் இல்லையடா மகனே! இதெல்லாம் ரகசியமடா!

அன்னையின் அருள்வாக்கு

]]>