நமது சித்தர்பீடத்தில் நவராத்திரி விழாவையொட்டி கருவறையில் 18.09.2009 அன்று மதியம் 12.15 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அகண்டதீபம் ஏற்றிவைத்தார்கள்.  28ம் திகதி வரை தினமும் இலட்சார்சனை நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர்பீடத்தில் சிறப்பான அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 18.9.2009 அன்று காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது.தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9.15 மணிக்கு சித்தர்பீடம் வந்த அருள்திரு அம்மா அவா்களை பக்தர்கள் பாத பூசை செய்து வரவேற்றனர்.12 மணி அளவில் ஈர உடையுடன் பிரகாரம் சுற்றி வந்த அம்மா 12.15 மணிக்கு பருவறையில் அகண்டதீபம் ஏற்றி வைத்து தாமே மூன்று பெண்களைத் தோ்ந்தெடுத்து அந்த தீபத்தை எடுத்துக்கொடுத்து பிரகாரத்தைச் சுற்றி வரும்படி உத்தரவிட்டார்கள். மேளதாளங்கள் முன்செல்ல பல்வேறு மணிகள் தாளங்கள் விளக்குகள் முதலிய பக்திச் சீா்வரிசைகள் தொடர அகண்ட தீபம் ஏற்றிய பெண்கள் சித்தா்பீட பிரகாரத்தையும் ஆங்காங்கே கருவறையின் முன்னும் பின்னும் நான்கு மூலைகளிலும் கைகளில் காமாட்சி விளக்கு  அகல்விளக்கு சாத்துக்குடி விளக்கு ஓம்சக்தி விளக்குகள் ஆப்பிள் விளக்குகள் ஏந்தியபடி நின்றிருந்த கன்னிப்பெண்கள், சிறுவா் சிறுமியா், பல்வேறு வயதினரான சுமங்கலிப்பெண்களை சுற்றி வந்து எதிரே அமைந்துள்ள அதா்வண பத்திரகாளி சன்னதியையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையை அடைந்தனா். கருவறையின் முன்பாக தேங்காயில் தீபம் ஏந்திய சிறுவா் சிறுமியா் அபண்ட தீபத்தை வரவேற்றனா். 

கருவறையில் அந்த மூன்று மகளிரிடமிருந்தும் அகண்ட தீபத்தை அருள்நிலையில் பெற்ற அருள்திரு அம்மா அதைக் கருவறையின் அக்னி மூலையில் நிறுவிய பின் பல்வேறு திருஸ்டிகள் எடுக்கப்பட்டன. தொடா்ந்து அகண்ட தீபத்தில் அருள்திரு அம்மா முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபாட்டைத் துவக்கிவைக்க பக்தா்கள் தொடா்ந்தனா். 

நவராத்திரியையொட்டி தினசரி சிறப்பு அபிடேக ஆராதனைகளும் உண்ணாமலை அம்மையார் குங்குமக்காப்பு நாகேஸ்வரி அம்மன் மஞ்சள் காப்பு வேப்பிலைக் காப்பு மெட்டி அலங்காரம் விபூதி காப்பு துளசி மண்டப அலங்காரம் சரஸ்வதி மற்றும் வனபத்திரகாளி அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டன. நவராத்திரி கொலுவும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய விழாவிற்கும் தினசரி அன்னதானத்திற்கும் சென்னை பெருநகர ஆதிபராசக்தி மன்றங்கள் பொறுப்பேற்று நடத்தின.

22.9.2009 செவ்வாயன்று மதியம் அகண்ட தீபத்தை கருவறையின் பின்புறம் வாயுமூலையில் எடுத்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மா தெரிவு செய்த மூன்று கன்னிப்பெண்களின் கரங்களில் தீபத்தைக் கொடுத்து அம்மா அவா்கள் முன்னின்று வழிகாட்ட பல்வேறு  முறைகளில் திருஸ்டிகள் எடுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டா்களுக்கு பிரசாதம் வழங்கும்படி அம்மா அவா்கள் திருமதி அம்மா அவா்களிடம் வேப்பிலைக்கொத்தினைக் கொடுத்தார்கள்.

  நன்றி
(அக்டோபா் மாத சக்திஒளி இதழ்)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here