வினா? மனித குலத்துக்குத் தீங்கு செய்யும் வேறு சக்தி ஏதேனும் உண்டோ? இருப்பின் அது யார்?

விடை:

மனித குலத்துக்குத் தீங்கு செய்யும் சக்திகள் உண்டு. அவை அசுர சக்திகள் என்றும், நன்மை தரும் சக்திகள் உண்டு. அவை தேவசக்திகள் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி வந்திருக்கின்றனர். இந்த இரு சக்திகட்கும் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் நம் ஊனக் கண்கட்குத் தெரியாமலே இந்தப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும், காஞ்சிப் பெரியவர் போன்ற ஞானிகள் சொல்கின்றனர். பொறாமை, பகைமை காரணமாக மந்திரம், பில்லி, சூன்யம் ஆகியவற்றினால் சில தீய சக்திகளை வசப்படுத்திக்கொண்டு வேண்டாதவர்கட்குத் தீங்கு செய்யும் நிகழ்ச்சிகளை நாம் அன்றாட உலகத்தில் கண்டு கொண்டு வருகின்றோம் அல்லவா? பில்லி சூன்யங்களால் – செய்வினைகளினால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் போது இவற்றை நம்பியாக வேண்டி இருக்கிறது!

ஆனாளப்பட்ட தேவனுக்கு எதிராகச் சாத்தான் ஒரு பெரிய கிளர்ச்சியே செய்தான் என்றும்; கடவுள் நோக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்று முளைந்தான் என்றும் பைபிள் கூறுகிறது அல்லவா? இந்தத் தீய குணங்களையே சாத்தான் என்று சொல்கிறார்கள் அல்லவா?

சமுதாயத்தில் நல்ல எண்ணங்களே ஓங்கும்போது தேவ சக்திகள் துணைபுரிகின்றன! தீய எண்ணங்கள் வரப்பின்றிப் பெருகுமானால் இந்தத் தீய சக்திகளின் ஆற்றலும் பெருகுகின்றன! அன்னை ஆதிபராசக்தி, ஒருமுறை அருள்வாக்கில் சொன்னாள். ‘‘இன்று நாட்டில் தீய சக்திகள் பெருவிட்டன் அதனால்தான் அராஜகம் வன்முறை – கொள்ளை – கொலை- கற்பழிப்பு போன்ற காரியங்கள் நடைபெறுகின்றன. ஆன்மிக உணர்வு பெருகி தெய்வ நம்பிக்கையும், தெய்வ பக்தியும் தெய்வ வழிபாடும் பெருகினால்தான் நன்மை ஏற்படும்” என்றாள்.

ஆக, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தீய சக்திகள் பல உண்டு என்றும், அத்தீய சக்திகளின் ஆற்றல்கள் அழிய வேண்டுமானால் நல்ல எண்ணங்கள் மிகுதியாகப் பரவ வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பாக இறை நம்பிக்கை, இறைவழிபாடு பக்தி – அறம் ஒழுக்கம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை (Values) மனித குலம் புரிந்துகொண்டு வாழ முனைய வேண்டும் என்றும் – இல்லையேல் அழிவுப் பாதையில் சென்று மனிதனை மனிதன் அடித்துக்கொண்டு சாக வேண்டிய நிலைதான் வரும் என்றும் தெரிகிறது.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982) பக்கம்: 39

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here