நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா வருடம் இருமுடி செலுத்துவேன். இளைஞர் அணித் தொண்டனாக இருந்து ஆன்மிக ஜோதி எடுத்து வருவேன்.

இவ்வாறு நான் ஆன்மிகப் பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தாலோ என்னவோ, பொறாமை கொண்ட தீய சக்தி ஒன்று அவ்வப்போது எனக்குத் தொல்லை கொடுத்து வந்தது.

ஆறு ஏழு ஆண்டுகளாகத் தீய சக்திகள் தொல்லை கொடுத்து வந்தன.

நான் இரவில் தூங்கும்போது ஒரு ஆள் வந்து என்னைத் துரத்துவதுபோல கனவு வரும். கழுத்துப் பகுதியின் பின்புறம் உள்ள நரம்புகள் நறு நறு என்று இழுத்துப் பிடிக்கும். காலையில் தூங்கி எழுகிறபோது எழுந்து உட்கார முடியாது.

யாரோ ஒரு ஆள் என் உடம்பை அழுத்துவது போல் தெரியும்.

எத்தனையோ மந்திரவாதிகளிடம் சென்று குணம்பெற முயன்றேன். செலவுதான் மிச்சம். பயன் இல்லை.

ஒருநாள் எங்கள் மன்றத்தில் அம்மாவின் திருவுருவப் படத்தின் முன் அமர்ந்து, “ என்னை ஏன் இந்த அளவு துன்பப்படுத்துகிறாய் ? நான் மன்றம் சென்று தொண்டு செய்கிறேனா இல்லையா ? அடிகளார் உருவத்தில் நீ எத்தனை பேர்களுக்கு அற்புதங்கள் செய்கிறாய் ? என் உடம்பிலே வருகின்ற தீய சக்தியை மட்டும் ஏன் ஓட்ட மாட்டேன் என்கிறாய் ? ஒன்று அதனை வெளியேற்று ! இல்லையேல் என் உயிரை எடுத்துக் கொள் “ என்று அழுது புலம்பினேன்.

மூன்று நாட்கள் கழித்து திருச்சிக்கு அம்மா ஆன்மிகப் பயணம் வருவதாகவும், ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்படியும் இரண்டு கடிதங்கள் வந்தன.

ஏதோ அம்மா இரண்டு கடிதம் போட்டிருக்கு. என்ன காரணம் என்று தெரியவில்லை. எப்படியும் திருச்சி சென்று அம்மாவுக்கு அளிக்கும் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று புறப்பட்டேன்.

16.6.1999 அன்று சனிக்கிழமை மாலை 3.00 மணி அளவில் ஊர்வலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சேலம் மாவட்டம் சார்பில் எங்கள் மன்றத்திலிருந்து 100 பேர் புறப்பட்டோம்..

ஊர்வலம் அம்மா தரிசனம் கொடுக்கும் மேடையருகே ஊர்ந்து வந்தது. நானும் வரிசையில் வந்த படி இருந்தேன்.

அம்மாவை நான் பார்த்தேன். அம்மா பார்வை என்மேல் பட்டபோது ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல உடல் நடுங்கியது.

அன்றிலிருந்து இன்று வரை தீய சக்திகளின் தொந்தரவு இல்லை.

நன்றி,

சக்தி. எஸ். சண்முக சுந்தரம்,

      வெண்ணந்தூர், நாமக்கல் மாவட்டம்.

சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் : 30 – 31.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here