எல்லாம் நன்மைக்கே பாகம் – 1

ஓம் சக்தி என்றால் ஓடோடி வருவாளே, பராசக்தி என்றால் பறந்தோடி வருவாளே என்பதை நம் தாய் ஆதிபராசக்தி பலமுறைகள் நமக்கு உணர்த்தியிருக்கிறாள். இதோ எங்கள் முசிறி மன்றத் தொண்டருக்கு அம்மா நிகழ்த்திய அற்புதக் காட்சி.யை சக்திஒளி மூலமாக வழங்குகிறோம்.

சக்தி. நாகராஜன் என்பவர் முசிறி மன்றத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 10 வருடங்களாக அம்மாவை வணங்கி வரும் பக்தர். மேல்மருவத்தூருக்கு மாலையும் அணிந்து போய் வருவார். அவரது சொந்த ஊர் மாங்கரபேட்டையாகும்.

அவரின் வீட்டிற்கருகே வசித்து வரும் சக்தி. செல்லம்மாள் என்பவருக்கு இதயத்தில் ஓட்டை. மருத்துவர்களிடம் காண்பித்துக் கைவிட்ட நிலை. சக்தி. செல்லம்மாள் ஏழ்மை நிலையில் உள்ளவர். அவர் நாகராஜனிடம் அணுகியபோது மருவத்தூருக்கு வாருங்கள், அந்த மண்ணை மிதித்து அம்மாவிடம் பாதபூஜை செய்து கேட்கலாம் என்று சொல்லி உள்ளார்.

சக்தி. செல்லம்மாளுக்கு சம்மதம். அவர் கணவரோ நம் அம்மாவிடம் ஈடுபாடு இல்லாதவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இருந்தும் செல்லம்மாள் அவர்கள் பாதபூஜை செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டு சித்தர் பீடத்திற்குப் போய் அங்குள்ள  மருத்துவமனைக்குப் போகலாம் என்று சொல்லி அவரையும் சக்தி. நாகராஜனிடம் அழைத்துச் சென்றார்.

சக்தி. நாகராஜன் இவர்களை அழைத்துக் கொண்டு முசிறி மன்றத்திற்கு வந்து அன்று நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டு எலுமிச்சைக் கனி ஒன்றைப் பெற்றுக் கொண்டார். பாதபூஜை செய்யும் தட்டுகூட மன்றத்திலிருந்தே வாங்கிக் கொண்டு சென்றனர். நடக்கக்கூட சிரமப்படும் சக்தி. செல்லமாளை எப்படிக் கூட்டிக் கொண்டு செல்வது? அம்மா துணையிருப்பாள் என்ற நம்பிக்கையில் சென்றார்.

திருச்சியில் சென்னை ரயில் ஏறி செல்கிறார்கள். இரயிலில் விழுப்புரம் வரை அவர்களுக்குச் சரியான இருக்கை கிடைக்காமல் உறங்காமல் சென்றனர். விழுப்புரம் வந்தவுடன் இருக்கை கிடைத்தது. சக்தி. நாகராஜன் உறங்கி விட்டார்.

மருவத்தூரைத் தாண்டும்போது அருகிலிருப்பவர் மருவத்தூர் வந்துவிட்டது என்று எழுப்பினார். ஆனால் ரயில் அதற்குள் மருவத்தூரைத் தாண்டிவிட்டது. இனி செங்கல்பட்டில் இறங்கி வரவேண்டும். இத்தனை முறை வந்திருக்கிறோம், ஒருமுறை கூட இதுபோல் நடந்ததில்லையே, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் இவர்களை நல்லபடியாக அழைத்துச் செல்ல வேண்டுமே என்று அம்மாவை வேண்டினார்.

நன்றி,

சக்தி. முசிறி வழிபாட்டு மன்றம்

சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 22

]]>