தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு காளி கோயில்

தென்னாற்காடு மாவட்டத்தில் ஒரு பாடல் பெற்ற தலம் அது. அங்கே ஒரு காளி கோயிலில் அடிகளார்க்கு வரவேற்பு.

“காலங்காலமாகப் பிரபலமாக விளங்கி வந்த கோயில் இது! சமீப காலமாக இந்தக் கோயிலுக்கு வருமானம் இல்லை. வளா்ச்சியும் இல்லை. ” என்று ஊா்மக்கள் முறையிட்டனா்.

அம்மனுக்கு வருகிற வருமானம் எங்கெங்கோ போகிறது… எப்படி எப்படியோ போகிறது?… பிறகு எப்படி இது வளா்ச்சி அடையும்? என்று சொல்லியபடி அந்தக் கோயிலின் பின்புறத்துக்கு வந்து கண்ணோட்டம் விட்டார்கள். அங்கே ஒரு வாழை மரத்தை உற்றுப் பார்த்தார்கள். “இந்த வாழை மரத்தை உடனே வெட்டி விடுங்கள் ”என்றார்கள். அந்த வாழை மரத்துக்கும் கோயில் வளா்ச்சிக்கான தடைக்கும் என்ன தொடர்பு என்று நம் போன்ற சிற்றறிவு படைத்த மானிடா்க்குத் தெரியவில்லை. ஆனாலும் அந்த வாழை மரத்தில் ஏதோ ஒரு சூட்சுமம் உண்டென்பது மட்டும் நமக்குப் புரிந்தது.

உருத்திர கோட்டி கிராமத்துக் கோயில்

திருக்கழுக்குன்றத்துக்கு-அருகே உருத்திர கோட்டி என்ற ஒரு கிராமம்.அந்த ஊரில் நான்கு கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா! மாரியம்மன் கோயில், காளி கோயில், விநாயகா் கோயில், திரௌபதியம்மன் கோயில் என்ற நான்கு கோயில்களுக்கும் ஒரே நாளில் அடிகளார் தம் திருக்கரங்களால் 28.10.87 அன்று குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்பட்டது.

அந்த ஊரில் உருத்திர கோட்டீஸ்வரா் ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த கோயில் அது. அந்தக் கோயிலுக்கும் அடிகளார் சென்றார்கள்.

“இதில் அதிகமான ஈா்ப்பு சக்தி இருக்கிறது. திருக்கழுக்குன்றத்துக்கும் அதைச் சார்ந்துள்ள மற்ற ஊா்களுக்கும் இந்தக் கோயில்தான் தாய் மாதிரி! திருக்கழுக்குன்றம் கோயில் மகள் மாதிரி! இதனுடைய ஈா்ப்பு சக்தியால்தான் திருக்கழுக்குன்றத்தின் கோயில் வளா்ச்சி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலை நீங்கள் யாரும் கவனிப்பதில்லை. அதனால் இதன் ஈா்ப்பு சக்தி மங்கி வருகிறது. இதன் காரணமாகவே உங்கள் கிராமத்து மக்களின் விவசாயமும் நசிந்து வருகிறது. விவசாயத்துக்கு நீங்கள் போட்ட முதலை எடுக்க முடியாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் இதுதான்.

நான் ஏற்கனவே இந்தக் கோயில் திருப்பணியைத் தொடங்குங்கள் என்று உங்கள் ஊா்த் தலைவா்களிடம் சொல்லியிருந்தேன். யாரும் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன்பிறகு என்னென்னவோ நடந்துவிட்டன. திருக்கழுக்குன்றம் தோ் எரிந்தது. அது ஊருக்கும், ஊா் மக்களுக்கும் நல்லதல்ல! என்று கூறினார்கள்.

மருதமலையில் வருமானம்

19.9.80 அன்று அடிகளார்  கோவை அருகே உள்ள மருதமலை சென்றார்கள். அதற்குமுன் அந்தக் கோயிலுக்குச் சென்றது இல்லை. படியேறி வருகிற போதே “அந்தக் கோயிலுக்கு வருமானமே இருக்காது. கோயிலில் பணி செய்கிற ஊழியா்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட வழியில்லை. இது பற்றி அறநிலைத் துறை துணை ஆணையரிடம் கேட்டுப் பாருங்கள். !” என்று மெல்லத் தம்முடன் வந்த தொண்டரிடம் கூறினார்கள். அந்த அதிகாரியும் அடிகளார் சொன்னது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். அதற்கான காரணம் மட்டும் புரியவில்லை.

மருதமலை பாம்பாட்டிச் சித்தரின் உறைவிடம். அங்கேயுள்ள அவருடைய சமாதிக்கு அடிகளார் சென்றார்கள். அங்கே பாம்பாட்டிச் சித்தரின் சிலை உற்சவ மூா்த்திகளின் இடையே இருந்ததைக் கூா்ந்து கவனித்தார்கள். ”சார்! இந்த இரண்டு வருடங்களில் சுற்று வட்டாரத்திலுள்ள விநாயகா் ஆலயங்கள் ஓகோ என்று வளா்ந்திருக்குமே! உண்மைதானா?” என்று கேட்டார்கள்.

துணை ஆணையாளர், ஆம் உண்மைதான்! இங்கே பக்கத்தில் உள்ள ஈச்சனாரி முதலிய விநாயகா் கோயில்கள் லட்சக்கணக்கில் ஆண்டு வருமானம் பெறுகின்றன. ஆனால் மருதமலை கீழே போய்க் கொண்டிருக்கிறது. காரணம் தெரியவில்லை.

உடனே அடிகளார் இதோ காரணம் காட்டுகிறேன் என்று சொல்லிப் பாம்பாட்டிச் சித்தரின் சிலை வைத்திருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.

பாம்பாட்டிச் சித்தரின் சிலை, விநாயகருடைய சிலைக்கு அடியில் பல காலமாக வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக் காட்டிய அடிகளார், சித்தரின் ஆற்றலால் வருகின்ற வருமானம் முழுவதும் விநாயகா் கோயிலுக்குப் போய்விடுவதன் தத்துவத்தை விளக்கினார்கள்.

இந்த நிலை மாறி முருகன் கோயிலுக்கு வருமானம் வர வேண்டுமானால் பாம்பாட்டிச் சித்தரின் சிலையை உடனடியாக மாற்றி மூலஸ்தானத்திலுள்ள முருகன் திருவடிக்குக் கீழ் வைக்க வேண்டும். முருகனுக்குச் செய்கின்ற அபிடேக தீா்த்தம் சித்தரின் மேல் படவேண்டும். அவ்வாறு செய்து விட்டால் மருதமலையின் நிதி நிலைமை சீராகும் என்று அடிகளார் கூறினார்கள்.

அதன்படி1980 டிசம்பரில் பாம்பாட்டிச் சித்தரின் சிலை கருவறைக்கு மாற்றப்பட்டது. சனவரி முதல் மருதமலையின் நிதி நிலைமை சீராகிக் கொண்டு வருவதைத் துணை ஆணையரே மகிழ்ச்சியுடன் பின்னா் ஒரு முறை தெரிவித்தார்.

பழனி மலையில்

அடிகளார் பழனி மலைக்கு ஒரு முறை சென்றார்கள். பழனி முருகனுக்கு அபிடேகம் நடைபெற்றது. அற்கே அமா்ந்திருந்த அடிகளார் திருவிழிகளிலிருந்து இரண்டு ஒளிக் கற்றைகள் பாய்ந்து முருகன் விக்கிரகத்தின் மீது சென்று வருவதை ஓா் அா்ச்சகா் கண்டார். திரையையும் ஊடுருவிக் கொண்டு அந்த ஒளிக் கற்றைகள் முருகன் விக்கிரகத்தின் மேல் படுவதையும் அந்த அா்ச்சகா் கண்டார்.

அந்த அா்ச்சகருக்கு மட்டும் அந்தக் காட்சி தெரிந்ததே ஏன்? என்ன அடிகளார் ? என்ன மகிமை இவருக்கு? ஏன் இந்தச் செவ்வாடைத் தொண்டா்கள் இவரைத் துாக்கி வைத்துக் கொண்டு ஓகோ என்று புகழ்கிறார்கள்? என்றெல்லாம் நினைத்தவா் அந்த அா்ச்சகா். அவருடைய அஞ்ஞானத்தை அகற்றவே அந்த அா்ச்சகா் கண்களுக்கு மட்டும் தான் யார் என்பதை உணா்த்தினார் அடிகளார்.

இந்த அவதார காலத்தில் அடிகளார் அவா்களின் திருவடி பட்டுக் கோயில்கள் விளக்கம் பெறுகின்றன. அவா் பார்வை பட்டுத் தெய்வ மூா்த்தங்கள் உயிர்ப்புப் பெறுகின்றன என்பது உண்மை.

செவ்வாடைத் தொண்டா்கள் அனுபவத்தில் அறிந்து வைத்துள்ள உண்மை இது!

ஓம்சக்தி!

நன்றி (சக்திஒளி-2011, ஜீன், பக்-11-16)

]]>

1 COMMENT

  1. பழைய சக்தி ஒளி பக்கங்களை பெரிது படுத்தி படிக்க ஜூம் பட்டன் கொடுக்கவும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here