நான் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவன். ஆறு மாதங்களாக என்னால் எழுந்து நடக்க முடியாதபடி முழங்கால் வலி ஏற்பட்டது. நான் ஒரு இதய நோயாளி என்பதால் டாக்டா்கள் குறைந்த வீரியம் உள்ள மருந்தையே கொடுத்தனா்.

இந்த நிலையில் எங்கள் மகன் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைத்து, அம்மாவுக்குப் பாதபூசை செய்து ஆசி பெற வேண்டிச் சென்றோம். அம்மாவிடம் அழைப்பிதழ் கொடுக்கிறபோதே “ஆமா….. நான்தான் திருமணம் அமைச்சுக் கொடுத்திருக்கேன்” என்றார்கள். தொடர்ந்து என் கால் வலிக்கும் மருந்து சொன்னார்கள்.

“நல்லெண்ணெயை லேசாகச் சூடு செய்து, பச்சைக் கற்பூரம் போட்டு, துளசி வில்வம் இலைகளை அரைத்துப் போடு, அதனுடன் நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மேலிருந்து கீழாகத் தடவிக் கோதுமைத் தவிடு ஒத்தடம் கொடு! பிறகு வெந்நீரால் திரும்பவும் ஒத்தடம் கொடு! செய்துவிட்டு எப்படி இருக்கிறது என்று வந்து சொல்லு! என்று அருளினார்கள்.

அம்மா சொன்னபடி மருந்து தடவியதில் ஒரு மாதத்திற்குள் வலி முற்றிலும் நீங்கி இப்போது நன்றாக நடக்க முடிகிறது.

ஆயிரம் கோடி நன்றியை அம்மாவின் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!

நன்றி!

ஓம் சக்தி! சக்தி. க.ப. பாலகிருஷ்ணசாமி, வத்தலகுண்டு அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 57)    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here