1996 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. நான் அம்மாவின் பக்தை. 1996 ஆம் ஆண்டு நாங்கள் சென்னை பல்லாவரத்தில் குடியேறினோம். அதற்கு முன்பு மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடியிருந்தோம். அப்போது வருடம் தவறாமல் சக்தி மாலை இருமுடி செலுத்தி வந்தேன். பல்லாவரத்தில் வந்து குடியேறிய பிறகு இருமுடி செலுத்த வேண்டிய நேரம் வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் இருமுடி செலுத்திவிட வேண்டும் என்று கூறினார்கள். ஏதேனும் வழிபாட்டு மன்றத்தின் மூலமாக வரவேண்டும். இங்கே மன்றம் இருக்குமிடம் தெரியவில்லையே எனத் தவித்தேன். மனம் பரபரத்தபடி இருந்தது. இந்த சுற்று வட்டாரத்தில் அம்மாவின் வழிபாட்டு மன்றம் இருக்குமிடம் தெரியவில்லையே……….. நமக்கோ இது புதிய இடம்! யாரைக் கேட்பது? எப்படித் தெரிந்து கொள்வது….. இன்னும் கொஞ்ச நாட்கள்தானே இருக்கிறது? தொடா்ச்சியாகச் செலுத்தி வந்த இருமுடி….. இந்த வருடம் விடுபட்டுப் போய்விடுமோ என்ற கவலை அதிகரித்துத் தின்றபடி இருந்தது.

அம்மா! தாயே…… இந்த வருடம் விட்டுப் போகாதபடி இருமுடி செலுத்த நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அன்று முழுவதும் சாப்பிடாமல் அழுதபடி உறங்கிவிட்டேன்.

நள்ளிரவு நேரம் 12.05 மணி இருக்கும். பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்தேன். என் மகன் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் தரையில் படுத்துக் கிடந்தேன்.

ஏதோ பேச்சுக் குரல் கேட்பதுபோல இருந்தது. கட்டிலிலிருந்து என் பையன் கீழே விழுந்து விட்டானோ என்று திரும்பிப் பார்த்தேன். அவனோ அயா்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.

இந்த நள்ளிரவு நேரத்தில் எங்கிருந்து பேச்சுக் குரல் வருகிறது…..? யார் நம்மிடம் பேசியது? என்று யோசித்தவாறு படுத்துக் கிடந்தேன். தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தேன்.

அப்போது……….

சுவா் முழுவதும் சிவப்பு விளக்கு எரிவதுபோல ஒரே ஒளி வண்ணம். சிவப்பு விளக்கு எரிவதுபோல் சிவப்பு ஒளி!

அந்த வெளிச்சத்தில் அறை முழுதும் ஒரே ஒளி மயம். சுவரைப் பார்க்கிறேன். அங்கே….. ஒரு அற்புதக் காட்சி….. அந்தச் சுவா் வெளிச்சத்தில்…… சிவப்பு ஒளி வெள்ளத்தின் நடுவே அன்னையின் உருவம்! அதுவும் எப்படி……..?

கருவறை அன்னை தெரிகிறாள். சிவப்பு நிறப் பட்டுப் புடவை! புடவையின் கரை நீல நிறம்! கையில் சூலம்! நிறைய நகைகள் போட்டுக் கொண்டு ஜொலிக்கிறாள். அப்படி ஓா் ஜொலிப்பு!

அது கண்டு எனக்கு ஆனந்தப் பரவசம் ஏற்பட வேண்டும் அல்லவா…….? அதற்கு மாறாக பயம்தான் ஏற்பட்டது. உடம்பெல்லாம் நடுக்கம்! என்ன செய்வது என்று தெரியவில்லை. யாரையும் எழுப்பிக் கூப்பிடவும் முடியவில்லை. வாய் அடைத்துக் கொண்டது. என் அனைத்து நாடி நரம்புகளும் ஒடுங்கி விட்டன.

அப்படியே…………….. அந்தக் காட்சி ஐந்து  நிமிடம் கிடைத்தது.

அதன்பின் அம்மா என் மகன் தலைமாட்டுக்கு அருகே அப்படியே இறங்கினாள். மறைந்து கரைந்து போனாள்.

அவன் மேற்குத் திசைப்பக்கம் தலை வைத்துப் படுத்திருந்தான்.

எப்படியாவது அம்மாவுக்கு இருமுடி செலுத்திவிட வேண்டுமே என்று மனம் பரபரத்தது. இருப்புக் கொள்ளவில்லை.

மன்றம் பற்றி விசாரித்துக் கேட்டறிய வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.

செவ்வாடை உடுத்திய ஒரு பாட்டியிடம் விசாரித்தேன்.

குரோம்பேட்டையில் ஆதிபராசக்தி மன்றம் இருப்தாகச் சொன்னார். குரோம்பேட்டைக்கே சென்றேன். அங்கே ஒரு செவ்வாடை சக்தி கிடைத்தார். என் வீட்டின் பின்புறம் ஒரு மன்றம் இருக்கிறது. மேற்குத் திசையில் ஒரு மன்றம் இருக்கிறது என்றார். எங்கள் வீட்டுப் பின்புறம் உள்ள மன்றம் கிழக்குத் திசையில் இருக்கிறது என்றார்.

கொஞ்சம் என் கூட வந்து காட்டுங்களேன் என்று கெஞ்சினேன். அவா் தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல், மேற்குத் திசையில் இருந்த மன்றத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்.

அதன் காரணம் அங்கே தான் புரிந்தது. அங்கே தொண்டு செய்ய ஆட்கள் இல்லை.

விடுவிடென்று மன்றத்துக்குச் சென்று, பொறுப்பாளா்களை விசாரித்தேன். அங்குச் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்தேன்.

தொடா்ச்சி அறுபடாமல் அந்த ஆண்டு இருமுடி செலுத்திய பிறகுதான் எனக்கு நிம்மதி கிடைத்தது.

அன்று சிவப்பு ஒளி வெளிச்சத்தில் அந்தச் சுவரில் காட்சி கொடுத்த அம்மாவின் உருவம்……….. இப்போது நினைத்தாலும் கண் முன் நிற்கிறது. என் போன்ற எளிய பெண்களுக்கும் காட்சி கொடுத்த அவள் கருணையே, கருணை!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. ஆர். கௌரி ராஜகோபால், மந்தவெளி, சென்னை – 28

மருவூர் மகானின் 68வது அவதாரத் திருநாள் மலா்

 ]]>

1 COMMENT

  1. இன்றும் என் அம்மாவிடம் நான் வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன் அம்மா மேல் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன்.
    நான் டிசம்பர் மாதம் அம்மாவிடம் பாத பூஜை செய்து வேண்டினேன்.அம்மா விடம் அம்மா நான் உங்கள் ஆசியால் MCA நல்ல முறையில் தேர்ச்சி பெற்று விட்டேன் 8 மாதங்கள் ஆகியதால் அம்மாவிடம் அம்மா எனக்கு நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கணும்நு கேட்டேன். அப்போ அம்மா சொன்னாங்க நான் உனக்கு நல்ல உத்தியோகம் அமைச்சு தரேன் அவசர படாத நு. நான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்தேன் அம்மா எனக்கு கண்டிப்பா வேலை தந்துடுவாங்க நு. எனக்குள்ள இருக்க பயம் 2012 வந்துட்டா 2011 இல் படிப்பு முடித்தவர்களை கம்பெனி களில் எடுக்க மாட்டார்களோ என்று, ஆனாலும் அம்மா மீது என் பாரத்தை போட்டு அம்மா நீ தான் காப்பாத்தனும் நு.
    பாத பூஜை செய்த பிறகு சென்ற முதல் கம்பெனி இல் என்னால் சரியாக தேர்வாக முடியவில்லை காரணம் என் பயம்மும் கவன குறைவும் தான். ஆனால் அடுத்த முறை நன்கு தயார் படுத்திக்கொண்டு இன்டெர்வியு அட்டென்ட் செய்தேன் எல்லா ரவுண்டு களிலும் தேர்வாகிவீட்டேன் மிகவும் மகிழ்ச்சி ஆனால் என்னை ஹோல்ட் செய்து இருந்தார்கள். மிகவும் சோதனையாக இருந்தது அம்மா என்று வேண்டினேன்,
    மனம் தளரவில்லை( தளரா மனதை தருவாய் போற்றி ஓம் ) என் நினைவில் நினைத்து வேண்டுவேன்.தினமும் 1008 போற்றி படித்து வந்தேன். பிறகு இதே போல் 2 கம்பெனி இல் என்னை ஹோல்ட் இல் தான் வைத்தார்கள். அம்மா அம்மா என்று தான் வேண்டுவேன் ஒவ்வொரு முறையும் இப்படி ஜெயித்த தோல்விக்கு. பிறகு ஒரு பெரிய கம்பெனி இல் இருந்து இன்டெர்வியு கு கால் லெட்டர் வந்தது. அம்மா விடம் வேண்டும்போது அம்மா நீங்கள் கூறிய நல்ல உத்தியோகம் இதுவாகவே இருக்க வேண்டும் என்று,3 நாட்களுக்கு முன்பு என் தாய் சக்தி ஒளி படித்து கொண்டு இருந்தார் அது 2002 ஆம் ஆண்டு வெளியீடு, அதில் ஒரு சக்தி அவருக்கு வேலை இல்லாமல் இருந்தார் என்றும் அவர் 1008 படித்து வந்தார் என்றும் அவர் கூறி இருந்தார். அவர் ஒரு நாள் சக்தி ஒளி படித்தபோது ஒரு சக்தி வேலைக்கு வேண்டி வேண்டுதற் கூறு பாடிவந்ததால் வேலை கிடைத்தது என்று எழுதி இருந்தார். இவரும் படித்து வந்த 4 ஆம் நாளே வேலை கிடைத்தது என்று கூறி இருந்தார்.
    என் தாய் படித்த நேரம் இரவு 11 கிட்ட இருக்கும் எனக்கு கண்கள் கலங்கின அம்மா தான் அறிவுரை கூறுகிறார்களோ என்று. அப்போதே அம்மா படம் முன் நின்று அழுதேன் மனம் வலித்தால். பின்பு வேண்டுதற் கூறு படிதேன். எனக்குளே அப்படி ஒரு தன்னம்பிக்கை, நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று.இன்டெர்வியு செல்லும் முன்பும் படித்து விட்டுதான் கிளம்பினேன் காலை 6 மணிக்கு. முதல் ரவுண்டு ஆரம்பித்தது அம்மாவின் மூல மந்திரம் 108 சொல்லி தான் ஆரம்பித்தேன். ரிசல்ட் கூறினார்கள் 3 batch சொன்னார்கள் என் பெயர் வரவில்லை அம்மா என்று தன் நினைதேன். 4 வது batch இல் என் பெயர் முதலில் கூறினார்கள். அம்மா விற்கு நன்றி கூறி என் இருக்கைக்கு சென்றேன்.
    2 வது ரவுண்டு வரை அன்று நடைபெறும் பிறகு அடுத்த ரவுண்டு மறுநாள் என்று லெட்டர் இல் இருந்ததது. 2 வது ரவுண்டு ஆரம்பித்தது மூல மந்திரம் கூறி என் பேச்சை தொடர்ந்தேன் அது குரூப் டிஸ்கஷன். அதிலும் தேர்வாகினேன். அம்மா என்று நினைத்து நன்றி கூறி. இனி அடுத்த நாள் தான் நன்கு தயார் செய்ய எண்ணினேன். அனால் தேர்வாளர் அன்றே 3 வது ரவுண்டு என்று கூறினார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை அம்மா விடம் கூறி அமைதி ஆனேன். 3 மணி நேரம் கழித்து என் பெயரை அழைத்தார்கள் அம்மாவை மனதில் நினைத்து கொண்டு உள்ளே சென்றேன்.கேட்ட கேள்விகளுக்கு நன்கு பதில் அளித்தேன் தேர்வாகிவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் வெளியே வந்தேன். அனால் நான் தேவாகவில்லை என்று ரிசல்ட் வந்தது. அப்போதும் அம்மா தான் என் நினைவில்.
    என் தோழி அங்கு தான் பனி புரிகிறாள் மேல் அதிகாரியிடம் பேசினேன் நீ கண்டிப்பாக செலக்ட் தன் என்றால் அனால் இப்படி ஒரு ரிசல்ட் அவளுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தான் திங்கட்கிழமை நேரில் பேசி நல்ல செய்தி கூறுகிறேன் என்றால். அதற்கும் அம்மா தான் அருள் புரிய வேண்டும். நாளை என்ன நடக்க போகிறது என்று பார்போம். அம்மா அம்மா அம்மா தன் என் வேண்டுதல். நான் பட்ட கஷ்டம் வீணாகாது என் நம்பிக்கை அம்மா. என்று நம்புகிறேன்.விதியை மாற்றி அமைக்கும் சக்தி எனக்கு உண்டு நீ என்னை முழுமையாக நம்பினால் என்று அதற்வர்ண காளி யிடம் படித்தேன். கண்டிப்பாக நடக்கும் அம்மா என்ன பதில் அளித்தாலும் என் நல்லதுக்கே என்று ஏற்றுக்கொள்வேன்.
    அம்மாவை நம்பினோர் கைவிடப்படமாட்டார்.

  2. amma
    nanum un bakthai than yen kalyanam 2009 el nadanthathu pala thadaikala mere nadathu antha thadaikalai thakarthathu amma than . om sakthi
    ana amma na kulanthai ellama thavikaren ma
    valkaiel pala kastapadren ma negathan yennaium yen kanavaraium valinadathanum

    • ———————————————
      @Sakthi dhivyaprabha,
      Don’t worry Sakthi amma va ninachi thinamum valipadu panunga, nichayam ningalum ungal kanavarum miga santhosam padumpadi ellam amayum – Omsakthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here