எம்மைப் பற்றி

பல இணைய தளத்தை பார்த்ததில், ஒவ்வொன்றும் ஒருவித தனிபட்ட ஒர் அழகுடன் பிரகாசமாக வெவ்வேறு மொழியில் செதுக்கப்பட்டு இருக்கிறது.  ஆனாலும் அவற்றினூடே ஆன்மிகத்தின் ஆழத்தின் ருசியை அறிந்து புசிக்க முடியவில்லை.

உறவுகள் பல முறையாக இருந்தாலும் “தாய்” என்னும் உறவுக்கு ஈடாக எதுவுமில்லை.  அதைப்போல்தான் தாய்மொழியில் இருக்கும் ருசி வேறுமொழியில் இல்லை. வேற்று மொழியில் சரியாகப் புரிந்து கொள்ள முடிவதுமில்லை.  அதனால் தான் என்னவோ அம்மா தமிழில் இவ் இனணய தளத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றாள்.  இவ் இணைய தளம் ஆன்மிகத்தின் முழுப் பசியை தீர்க்காவிட்டாலும் ஒர் ஆரம்ப பசியை தீர்க்குமென நம்புகின்றோம்.

இவ் இணைய தளம் ஆரம்பித்து செதுக்கிக்கொண்டு இருக்கும் பொழுது அம்மா ஆடிய திருவிளையாடல்கள் ஒன்றல்ல பல.  இனணய பக்கங்கள் செதுக்குவதில் ஆரம்ப  நிலை மட்டும் அறிந்து இருந்தவர்கள் மத்தியில் மிகவும் அறிய நுணுக்கங்களை காட்டி, அவ்வப்போது திருத்தி, திரும்ப வடிவமைத்து புதிய  தொழில்நுட்பம் மூலம் அறிமுகப்படுத்தி இவ் இணைய தளத்தை தன் இஷ்டப்படியே முடித்து சக்திகளுக்கு தாய் மொழியி்ல் தந்து இருக்கின்றாள்.