இருமுடி செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் இருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது பெரு மழையில் மாட்டிக்கொண்டார்கள்.
ஒரு ஏரி திறந்துவிடப்பட்டதால் அவர்களுடைய கார் வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டது கார் நிரம்பும் அளவு தண்ணீர். வாகன ஓட்டுனருக்கும் பயம பிடித்துக் கொண்டது.்வெள்ளத்துக்குள் கார் மெதுவாக செல்ல அருகில் ஒரு பஸ் வண்டி வந்ததாம். பஸ் ஓட்டுனரை பார்க்க மருவூர் சின்னவர் மாதிரி இருந்ததாம்.என்னுடைய பஸ்சுக்கு பின்னால் வா என்று ஓட்டுனரிடம் சொன்னாராம். கார் பஸ்சுக்கு பின்னாலே சென்று மிக நீண்ட நேரம் கழித்து சென்னையை அடைந்தது. முன்னால்சென்ற பஸ்சும் எங்கோ போய்விட்டது. தங்குவதற்கு ஒரு இடம்கூட இல்லாமல் அலைந்தபோது வாகன ஓட்டுனர் தன்னுடைய வீட்டில் தங்கும்படி கேட்டுள்ளார். ஆபத்துக்கு உதவும் அந்த நல்ல மனிதரின் மனிதாபிமானத்துக்கு நன்றி கூறி்அவர் வீட்டில் தங்கினார்களாம். அவர்களும் தமது கஷ்டங்களை பொருடபடுத்தாமல் மிகவும் அன்பாக உபசரித்தார்கள்.
மறுநாள் இவர்கள் வைத்திருந்த தண்ணீர் முடிந்து விட்டது. இடுப்பளவு தண்ணீரில் ஒரு கிலோமீட்டர் வரை நடந்து சென்று,ஒரு கடையில் இருந்த ஒரேஒரு தண்ணர் போத்தலை வாங்கிக் கொண்டு வெள்ளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாராம். இருமுடி எடுக்க வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே,எப்படி மருவத்தூருக்கு போவது,எப்போ இருமுடி எடுப்பது மீண்டும் எப்போ ஊர் போய் சேருவது என்று நினைத்து கொண்டே நடந்த போது தூரத்தே இவரை நோக்கி ஒரு செவ்வாடை அணிந்தவர் வந்து (தெரிந்தவர்தான்),பயப்படாம என்னோட வாங்கோ மருவத்தூருக்கு அழைத்துப் போகிறேன் என கூறி, தன்னுடைய காரில் அவர்களை அழைத்து சென்று மருவத்தூரில் விட்டாராம் . மருவூர் மண்ணை மிதித்த பின்புதான் நிம்மதியாக மூச்சு விட்டார்களாம்.
எனக்கு மிகவும் வேண்டிய வர்களான அந்த செவ்வாடை சக்திகள் கூறியதை கேட்டவுடன் என்ன பேசுவதென்றே எனக்கு தெரியவல்லை.
“இருமுடி எடுக்க விடாமல் எத்தனயோ தடங்கல் வரும்.அதை எல்லாம் தகர்தது எறிந்து வரவேண்டும். (உண்மை).்
தன்னை நம்பி வந்த பக்தர்களை அந்த தெய்வம். கைவிடாது.்(அனுபவ உண்மை. )
தக்க சமயத்தில் செவ்வாடை தொண்டன் வந்து உதவியதை என்னென்பது.
பஸ் ஓட்டுனர் சின்னவர் உருவில் இவர்களுக்கு காட்சி தந்தது ்இவர்கள் வண்டியை வழி நடத்தியது எல்லாமே தெய்வச் செயல் அல்லவா!
இன்று மருவூர் மண்ணில் நிம்மதியாக, ஆலயத்தில் சக்திமாலை அணிந்துள்ளார்கள்.
ஆபத்து என்று வரும்போது ஒரு செவ்வாடை தொண்டன் வந்து நிச்சயமாக காப்பாற்றுவான்.
தன்னை நம்பியவர்களை அந்த தாய் காப்பாற்றமாட்டாளா என்ன!

இந்த சமயத்தில் 95ம் ஆண்டு யாழ்மண்ணில் அகதிகளாகி நிர்கதியாக நின்றதை நினைவு கூர்ந்த அவர், இன்று சென்னையில் நிர்ககதியாக நின்றபோது மகனே என்று அரவணைத்து காத்த அந்த தெயவத்தாயை கண்ணீர் மல்க வணங்கிப் போற்றுகிறார்.