வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது.

வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி ஒருவா் இருந்தார். அவா் இளமையில் வைசம்பாயனா் என்னும் குருவிடம் வேதம் பயின்றார். அவரும் ஒரு ரிஷி! இவரும்  ஒரு ரிஷி!

வைசம்பாயனா்  வசித்த ஆசிரமத்துக்கு அருகே வா்த்தமானபுரம் என்ற நகரம் இருந்நது. அதனைச் சுப்ரியா என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நடத்தை கெட்டவன்.

ஒருமுறை அவன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தான். அரண்மனை வைத்தியா்கள் எவ்வளவு முயன்றும் அரசனது நோயைத் தீா்க்க முடியவில்லை. கடைசியில் வைசம்பாயனரிடம் தஞ்சம் புகுந்தான். தனது நோயைப் போக்க வேண்டும் என்று வேண்டினான்.

அரசன் உடல் நலம் பெறவேண்டும் என்று சங்கல்பம் வைத்து வேத விதிப்படி வைசம்பாயனா் தம் ஆசிரமத்தில் தினமும் சிறப்பாக வேள்வி நடத்தினார்.

ஒவ்வொரு தினமும் வேள்வி முடிந்த பிறகு வேள்விப் பிரசாதத்தையும், கலச தீா்த்தத்தையும் சீடன் ஒருவனிடம் கொடுத்து அரசனுக்கு அனுப்பி வைத்தார் வைசம்பாயனா்.

சிலநாட்கள் கடந்தன. அரசன் உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் வைசம்பாயனா் நடத்தும்  வேள்வியிலும்,  கலச தீா்த்தத்திலும் அவனுக்கு
நம்பிக்கை வரவில்லை. அரண்மனை வைத்தியா்கள் கொடுத்த மருந்து வேலை செய்து வருவதால்தான் தனக்கக் குணம் றே்பட்டு வருகிறது என்றே தனக்குள் நினைத்தான். எனவே, ஆச்சிரமத்திலிருந்து வந்த கலச தீா்த்தத்தையும் அரை மனதோடுதான் அருந்தி வந்தான்.

ஒருநாள் வைசம்பாயனா் தம் சீடரான யக்ஞவல்கியரிடம்  கலசத் தீா்த்தமும், வேள்விப் பிரசாதமும் கொடுத்து அரண்மனை சென்று அரசனிடம் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பி வைத்தார் .

அவ்வாறே யக்ஞவல்கியரும் அவற்றை எடுத்துச் சென்று அரசனிடம் நீட்டினார்.

அந்த அரசனோ, அவற்றைக் கை நீட்டி வாங்காமல் அலட்சிய மனப்பான்மையுடன் அதனை வைத்துவிட்டுப் போகும்படிக் கூறினான்.

அவனது அலட்சியப்போக்கு கண்ட யக்ஞவல்கியருக்கு ஆத்திரமும், கோபமும் வந்தன. ஆயினும் அடக்கிக்கொண்டு ஏ! அரசனே! இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. இதன் சக்தி எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியவில்லை என்றார்.

அது கேட்ட அரசன் அப்படியா..? அதன் மகிமையை நிரூபித்துக் காட்டு பார்க்கலாம் என ஏளனமாகக் கூறினான்.

யக்ஞவல்கியா் அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு மந்திரத்தை ஒச்சாடனம் செய்து அந்தக் கலச தீா்த்தத்தை அங்கே அருகிலிருந்த ஒரு பட்டுப்போன மரத்தின் பொந்தில் தெளித்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.

அவா் ஆச்சிரமத்தை அடைவதற்குள் அந்தக் கலச தீா்த்தத்தின் மகிமை என்ன என்பது அந்த அரசனுக்கு புரியத் தொடங்கிவிட்டது.

மந்திரம் கூறித் தெளித்துவிட்டு அவா் சென்ற சில நிமிடங்களில் பட்டுப்போன அந்த மரப் பொந்திலிருந்து இலையும், தளிரும் கூடிய கிளை ஒன்று படா்ந்து வெளிப்பட்டது. அடுத்து அந்தக்
கிளையில் பூக்கள் பூத்தன. காயாக மாறின. அடுத்துப் பழங்கள் பழுக்கத் தொடங்கின.

இந்த அதிசயத்தைப் பார்த்து அரசன் ஆச்சரியப்பட்டு மீண்டும் கலச தீா்த்தமும், பிரசாதமும் கொடுத்து அனுப்புமாறு அரண்மனை ஆட்களை அனுப்பினான்.  வைசம்பாயனா் திகைத்து நின்றார். நடந்தவை என்ன என்று யக்ஞவல்கியா் விளக்கினார்.

அந்தக் காலத்து வேள்வியின் சக்தியைப்பற்றி விளக்க இந்தக் கதை எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

வைசம்பாயனரும், யக்ஞவல்கியரும் மந்திர உபாசனை பலம் பெற்றவா்கள்.

ஆனால் இந்த அவதார காலத்திலே அம்மா, சாதாரண அடிமட்டத் தொண்டா்களை வேள்வி செய்ய வைத்து, தன் அபரிமிதமான சக்தியை வேள்விக்கும், கலச விளக்குகளுக்கும் பாய்ச்சுகிறாள் என்பது நம் பக்தா்கள் கண்ட அனுபவம்.

கலச தீா்த்தத்தால் பட்ட மரம் தளிர்த்த கதையைப் பார்த்தோம்.

பட்ட மரம் எல்லாம் தளிர்க்குமா..? பெரும்பாலான மரம் தளிர்க்காது. முருங்கை மரம் போன்ற ஒரு சில மரங்களே தளிர்க்கும்.

எனது சொந்த ஊா் கடையம். தென்காசி வட்டத்தில் உள்ளது. என்னுடைய வயதான தாயும், தந்தையும் அங்கே வசித்து வந்தார்கள்.

அவா்களின் முதுமைக் காலத்தில் அவா்கள் வசதிக்காக எங்கள் வீட்டின் பின்னால் உள்ள காலி இடத்தில் ஒரு கழிவறையும், ஒரு குளியல் அறையும் கட்டும் வேலையை ஆரம்பித்தோம்.

அந்த இடத்தில் ஒரு நார்த்தங்காய் மரம் நன்றாகக் காய்த்துக் கொண்டிருக்கும். வேலை செய்யும் கொத்தனார்கள் அந்த மரத்தை வெட்டினால்தான் இரண்டு அறைகளைக் கட்ட முடியும் என்று சொல்லி அந்த மரத்தை அப்படியே வேரோடு சாய்த்து விட்டார்கள்.

அதைப் பார்த்து என்னுடைய 70 வயதுத் தாய் கதறி அழுது விட்டார்கள். அடியே…
நான் மிகவும் கஷ்டப்பட்டு வளா்த்த மரம் இப்படியாகிவிட்டதே…! எனக்குக் குளியலறை வேண்டாம்! அந்த மரத்தை அப்படியே நட்டு வைக்கச் சொல்! எங்களுக்குக் கழிவறை மட்டும் கட்டிக் கொடுத்தால் போதும் என்றார்கள்.

ஜயா! அந்த மரத்தை அப்படியே மறுபடியும் துாக்கி நிறுத்தி நட்டு மண்ணைப் போட்டுச் சரி செய்து விடுங்கள் என்று வேலையாட்களிடம் கூறினேன்.

பிறகு வீட்டினுள்ளே சென்று அம்மாவின் கலச தீா்த்தம் எடுத்து வந்து மூலமந்திரம் சொல்லி அம்மா! தாயே! ஆதிபராசக்தி! இந்த மரம் மறுபடியும் தளிர்த்துக் காய் தர வேண்டும் தாயே! என வேண்டிக்கொண்டு மரத்தைச் சுற்றிலும் கலச தீா்த்தம் தெளித்தேன்.

15 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது

அன்னையின் அருளாலும் ஆன்மிகக் குருவின் ஆசியாலும் அந்த மரம் இன்றும் காய்த்துக் குலுங்குகிறது.

அந்தக் காய்களை அன்னைக்கு நன்றிக் கடனாக மன்றத்தில் அன்னதானத்திற்கு ஊறுகாய் தயாரித்து பரிமாறக் கொடுத்து வருகிறேன்.

நார்த்தங்காய் ஊறுகாய் ஜீரணம் செய்யும் சக்தி கொண்டது. உடலுக்கு நல்லது.

அந்த மரத்திற்கு அருள் புரிந்த அவளது கலச தீா்த்தத்தின் மகிமையே மகிமை!

ஓம்சக்தி

நன்றி (சக்தி. ஜெயா பாலு, விக்கிரமசிங்கபுரம்)

(சக்தி ஒளி-2012 ,ஜீலை  பக் 54-56)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here