3). நம்முடைய வாழ்க்கை என்பது இப்பொழுது மிகவும் குழப்பமானதாக மாறிவிட்டது. ஆன்மிகப் பயிற்சிகளுக்கோ நேரமும் சக்தியும் நிறைய தேவைப்படுகின்றன. அவைகளை எப்படி சமண் படுத்துவது? வாழ்க்கை என்பது இன்பங்களை மட்டுமே நுகா்வதற்காக எனும் எண்ணங்களும், விஞ்ஞானத்திலேயே மூழ்கிக் கிடப்பதும், மெஞ்ஞானத்தை மறந்து விடுவதும், குறிப்பாக இயற்கையின் இறைத் தன்மைகளை உணராமல் இருப்பதும் இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம். ஒரு நாளில், ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் எது, எதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டோம் என்பதைக் குறித்து வைத்து, இதில் எதை எதைச் செய்து நேரத்தை வீணடித்தோம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே, உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். உங்கள் வாழ்க்கை குழப்பம் தீர உங்களுடைய மனசாட்சிப்படியான உண்மையான உள்தேடலும், உங்கள் நடவடிக்கைகளை வரைமுறைப்படுத்தும் உங்கள் உண்மையான ஈடுபாடும்தான் உங்களுக்கு இதில் உதவ முடியும். 4). ஆன்மிகத்திற்கு என்று ஒரு வயதுண்டா? குழந்தையின் பல்வேறு ,ஈர்ப்புகளுக்கு நடுவே, அவா்களை பல்வேறு தவறான திசைகளில் சென்று விடாமல் தடுப்பது எப்படி? ஆன்மிகத்திற்கு வயதில்லை. பல்வேறு ஈர்ப்பு சக்திகளின் நடுவே குழந்தைகளை வளா்ப்பதுவும், கண்காணிப்பதுவும், அவா்களை வழி நடத்துவதும் அவா்களின் பெற்றோர்களிடம்தான் உள்ளது. அந்தக்காலக் கல்வி முறையில் நீதி போதனை என்று இளம் உள்ளங்களில் ஏற்றும் வகுப்புகள் இருந்தன. அன்று கூட்டுக் குடும்பம் இருந்தது. தாத்தா, பாட்டிகள், குழந்தைகளுக்கு நல்ல நீதிக்கதைகள் கூறி அவா்கள் பிஞ்சு உள்ளங்களில் அவற்றைப் பதிய வைக்கும் வாழ்க்கை முறைகள் இருந்தன. குறிப்பாக பிள்ளைகளின் விடலைப் பருவத்தில் பெற்றோரின் கண்காணிப்பு அவா்களுக்கு மிகமிகத் தேவை. பொதுவாக, சொல் ஒன்று, செயலும் அதுவே என்று பெற்றோர்கள் வாழ்ந்தால், குழந்தைகளும் அந்த நிலையிலேயே வளரும். வளரும் வாய்ப்புகள் அதிகம். 5). ஆன்மிகத்திற்கு குரு தேவையா…? ஆன்மிகத்திற்கு குரு அவசியம் தேவை. உன் உருவத்தைப் பார்க்கக் கண்ணாடி தேவை. அக்கண்ணாடி கூட உன் பின்பக்க  உருவத்தை முழுமையாகப் பார்க்க உதவாது. உனக்குத் தெரியாத ஒரு உருவம் உன்னிடம் உள்ளது.  அந்த உருவத்தைப் பார்க்கவும், வழி நடத்தவும், நெறிப்படுத்தவும், குரு கட்டாயம் தேவை. தாய், தந்தை, குரு, தெய்வம் என்பார்கள். பிறந்து தாயை அறியும் குழந்தைக்கு தாய், தந்தையைக் காட்டுகிறார். தந்தை ஆசானைக் காட்டுகிறார். அந்த ஆசான் எனப்படும் குரு தெய்வத்தைக் காட்டி தெய்வத்தை அறிய வைக்கிறார். வாழ்க்கைக் கல்வி கற்கவே ஆசிரியா் எனும் குரு தேவைப்படும் பொழுது, ஆன்மிகக் கல்வி கற்க ‘ஆன்மிககுரு அவசியம் தேவை. ஓம் சக்தி!  

]]>

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here