ஒரு தாயின் கண்ணீர்!

ஒருநாள் என் துணிக்கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன். ஒரு பெண்மணியும் அவருடைய மகனும் என் கடைக்கு வந்தார்கள். அரக்கோணம் தாலுகா, அத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தத் பெண்மணியின் மகன் பெயர் வெங்கடேசன்.அந்தப் பையனுக்கு தீராத முதுகு வலியாம். பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார். முதுகெலும்பில் சளியும், சீதளமும் அதிகமாக உள்ளதாம்.

ஒன்றரை வருடம் தொடர்ந்து மருந்தும் மாத்திரையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர் என்றார். “என்னிடம் மருந்து வாங்கக் கூட பணமில்லை. இந்நிலையில் ஒன்றரை வருடம் எப்படி தொடர்ந்து மருந்து வாங்கிக் கொடுப்பேன்? என் மகனைக் காப்பாற்ற ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று சொல்லி அழுதார்.
அந்தப் பெண்மணியின் சோகக் கதையைக் கேட்ட நான் , ” பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் டாலர் ஒன்றையும், சட்டைப்பையில் வைத்துக் கொள்ள பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படத்தையும், வேண்டுதற்கூறு சிறிய மந்திர நூல் புத்தகத்தையும் கொடுத்து.

“டாலரை எப்போதும் கழுத்தில் அணிந்து கொள்! படம் உன் பாக்கெட்டிலேயே இருக்கட்டும்! நாள் தோறும் காலை,மாலை இரண்டு வேளையும் மந்திரம் படித்து வா!” என்று அந்தப் பையனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். என் முயற்சி வீண் போகவில்லை. ஆம்!

மீண்டும் அந்தப் பையன் பரிசோதனைக்காக சென்ற போது, டாக்டர்களே ஆச்சரியப்படும் வகையில் நோய் குறைந்திருந்தது. ஆனாலும், மூன்று மாதம் வரை மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொல்லி அனுப்பினர்.
இருமுடி ஏந்தி ஆலயத்திற்கு வந்தான். இருமுடி செலுத்திய பிறகு மாத்திரை இல்லாமலேயே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் அவனைக் குணமாக்கி விட்டார்கள்.

மூன்றாவது பரிசோதனைக்குச் சென்ற போது, டாக்டர்களே ஆச்சரியப்பட்டு, “உன் உடம்பில் ஒன்றுமே இல்லை. நன்றாகக் குணமாகி விட்டது. நீ போகலாம்” என்று சொல்லியனுப்பி விட்டார்கள்.
“திக்கற்றவனுக்கு தெய்வமே துணை!” என்னும் பழமொழியை உண்மையாக்கி காட்டினாள் அன்னை ஆதிபராசக்தி.

ஓம்சக்தி!!

சக்தி எஸ். மல்லிகா அர்ச்சுனன், உபதலைவர், வாலாஜா பேட்டை மன்றம்.
பக்கம் 20-21.
சக்தி ஒளி மார்ச் 2021.