22வருடம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் மீது கொண்ட பக்தி!

நான் 22 வருடமாக அம்மாவிடம் பக்தியாக இருக்கிறேன். அம்மாவின் நாமம் என் மனதில் எப்போதும் பதிந்திருப்பதால், அடிக்கடி மருவூர் மண்ணை மதிக்க அருள் பாலித்தாள்.

எங்கள் குடும்பம் படாத தொல்லை இல்லை, வராத கக்ஷ்டமும் இல்லை. வசதியில்லாத குடும்பம், “ அம்மா ! எங்கள் குடும்பத்திற்கு ஒரு வழி அமைத்துக் கொடு “ என்று வேண்டிக் கொள்வேன்.

ஒரு நாளைக்கு 1000 தடவை மந்திரம் எழுதுவேன்

ஓம்சக்தி ஓம் ! என்று ஒரு நாளைக்கு 1000 முறை எழுதுவேன். இதற்குப் பிறகு தான் அம்மா அடிக்கடி என் கனவில் வர ஆரம்பித்தாள். பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்ல ஆரம்பித்தாள்.

உனக்குப் பாத பூஜை செய்ய முடியவில்லையே…….

ஒரு நாள் அம்மாவை நினைத்து, அம்மா ! என்னைப் போன்ற ஏழை மகள் எப்படியம்மா உன் காலடியைத் தொடுவது ? உன் ஆசி பெறுவது எப்படியம்மா ? என்று நினைத்துக் கலங்கினேன்.

நாளை நவம்பர் முதல் நாள்:

அது என் பிறந்த நாள்: உன் பாதம் பற்றி ஆசி பெற வேண்டும். உன் ஆசி கிடைக்க வேண்டும். நீ என்னை உன் மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.என் கவலைகளிலிருந்து என்னை மீட்க வேண்டும் என வேண்டிக் கொண்டு படுத்து உற்ங்கி விட்டேன்.

அன்று இரவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் என் கனவில் தோன்றி ஆசி வழங்குகிறாள். அம்மாவின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். அப்படி ஒரு காட்சியளித்து பாத பூசை செய்ய வைத்தாள். இந்தக் கனவு என் மனத்திற்கு அருமருந்தாக அமைந்தது…

நன்றி

சக்தி. ராஜலட்சுமி பிரம்ம தேசம், பெரம்பலூர் மாவட்டம்.

பக்கம் -32 .
சக்தி ஒளி அக்டோபர் 2009.