நல்லது கிட்டும்! கெட்டது கிட்டாது!

0
1706

என் பெயர் ஸ்ரீதேவி. என்னுடைய வாழ்க்கையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய சித்தாடல்களை இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

2008 ல் எனக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டேன். உடனே அன்னை ஆதிபராசக்தியின் மருத்துவப் பணிக்கு காணிக்கை அனுப்புவதாக வேண்டிக்கொண்டு,என் சகோதரர் மூலமாக அனுப்பினேன். உடனே என் வலி குறைந்தது. என் கணவருக்கு நல்ல Project கிடைக்க வேண்டும் என்றும், கிடைத்தால் சக்தி ஒளிக்கு எழுதுவதாகவும் வேண்டிக் கொண்டேன். அதே போல் நிறைவேறியது.

என் சகோதரன் சிறுநீரகத்தில் பிரச்சினையால் கவலைப்பட்டு வந்தான். அவனுக்கு விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டி வந்தோம். இப்போது நலமுடன் இருக்கிறான்.

துபாயில் பணி புரியும் என்னுடைய கணவருக்கு ஓட்டுனர் உரிமம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டார். பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.

கவலைப்படாமல் தேர்வில் கலந்துக்கங்க! என்று சொன்னேன்.
“பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் நமக்கு நல்லது என்று கருதினால் உடனே அது நமக்குக் கிட்டும்; கெடுதல் என்றால் கிட்டாது” என்று கணவரிடம்சொன்னேன்.
உடனே என் கணவர் உரிமம் நமக்குக் கிடைத்து விட்டால் ஓட்டுனர் உரிமத் தேர்விற்கு கட்டும் தொகை 7500

அதனுடன் 2500 சேர்த்து பத்தாயிரமாக மேல்மருவத்தூருக்கு செலுத்தலாம்
என நாங்கள் வேண்டிக் கொண்டோம்.

செவ்வாய்க்கிழமை அன்று தேர்வு !என்ன ஆச்சரியம்…! கிட்டத்தட்டஒன்றே கால் வருடம் கிடைக்காத ஓட்டுனர் உரிமம் அன்று என் கணவருக்கு கிடைத்தது. அப்போது நாங்கள் வியப்பில்ஆழ்ந்தோம். அந்த நிமிடம் மனதார அன்னை ஆதிபராசக்திக்கு நன்றி சொன்னேன். விரைவில் காணிக்கையும் செலுத்த உள்ளேன்.

உண்மையான சரணாகதி அடைந்து விட்டால்.பரம்பொருள் பங்காருஅம்மா நம்மைக் கைவிடாமல் காப்பாற்றுவாள் என்று என்னுடைய வாழ்க்கையில் நடந்த இனிய அற்புதங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம்சக்தி!
சக்தி ஸ்ரீதேவி, கோவை.
பக்கம் 13
சக்தி ஒளி ,ஜனவரி 2010.