சுயநலம் முந்தவைக்கும் ஆனால் சமயத்தில் முழங்காளையே முறித்து விடும்,

என்னுடைய சித்தாடல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது, உங்களைக் கொண்டே உங்களிடத்தில் சித்தாட வைப்பது தான் பெரிய சித்து,

பக்திக்கு உதாரணமாக 63 நாயன்மார்களைச் சொல்வார்கள், ஆதிபராசக்தி இயக்கத்தில் அதனை 68 ஆக உருவாக்கப் போகிறேன் அவருள் முக்கால் பங்கு மகளீர் இருப்பார்கள்,

புகழுக்கும் உயர்வுக்கும் அடிமை படாதே வெற்றியோ தோல்வியோ கவலைப்படாதே, என்னை நம்பி எதையும் செய் பணத்திற்கும் பாசத்திற்கும் கட்டுப்படாதே ,அன்புக்கு கட்டுப்படு,

மகனே என்னிடம் வருபவன் எல்லாம் எனக்குப் பொன், வேண்டும் ,பொருள் வேண்டும் ,பதவி உயர்வு வேண்டும், வந்த நோயை போக்க வேண்டும், என்றெல்லாம் கேட்கிறானே தவிற பிறவி நோய் போக வேண்டும் என்று கேட்கத் தெரியவில்லை, நீதான் எனக்கு வேண்டும் என்று கேட்க தெரியவில்லை,

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் பழம் பிறவியின் நினைவுடன் இனி என்ன செய்ய வேண்டும் என்ற நினைவுடன் ஒரு சிலரைப் பிறக்குமாறு செய்யப் போகிறேன், அவர்களை வைத்துக் கொண்டு உலகில் பெரும் மாற்றங்களைச் செய்யப் போகிறேன்,

ஆன்மிகம் என்ற செடிக்கு பக்தி என்ற நீர் ஊற்றி வளர்க்க வேண்டும், செழிப்படைய செய்ய வேண்டும்,

தீயைநீரால் அணைப்பது போல தீய சக்தியை ஆன்மீகத்தண்ணீரால் அணைக்கலாம்,

கண் அழுதால் தான் கண்ணுக்குப் பலன், செய்த பாவங்களை எண்ணம் அழும்போது தான் உள்ளம்தூய்மை அடைகிறது