மேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்சி

0
219

ஒரு சக்திக்கு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தையல் மிஷின் ஊசி கையில் தைத்து ஊசி முனை ஒடிந்து ஆள்காட்டி விரல் உள்ளே சென்று விட்டது. விரல் வலிக்கிறது என்று இவர் டாக்டரிடம் சென்று காண்பித்தார். அவர் எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு ஊசி முனை ஏதும் விரலுக்குள் இல்லையென்று நன்றாக உள்ளதென்று மாத்திரை மருந்து எழுதிக்கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனாலும் அவருக்கு வேதனை குறையவில்லை.

இவர் 24.03.2019 அன்று நடைபெற்ற கிராம நல வழிபாட்டில் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை செய்தார். அர்ச்சனை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்பியவரை மத்திய பிரச்சாரம் குழு சக்தி.இந்திராகாந்தி அவர்கள் தடுத்து அம்மா அவர்கள் பற்றிய அற்புதங்கள் சொல்லப்போகிறேன் இருந்து கேட்டு விட்டு செல்லுங்கள் என்று உட்கார வைத்தார்கள். அவரும் அம்மா பற்றிய அற்புதங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது நடந்த அற்புத நிகழ்ச்சி. எந்த விரலில் வேதனை எடுத்ததோ அந்த விரலில் அவர்கள் அம்மாவின் அர்ச்சனை குங்குமத்தை வைத்துள்ளார். சிறிது நேரத்தில்முள் போல் முனை வெளியே துருத்திகொண்டு வந்துள்ளது.

உடனே அவர் அம்மாவின் அற்புதங்களை காதில் வாங்கிக்கொண்டே அதை வெளியே எடுத்துள்ளார். எந்த வித வேதனையின்றியும், ஒரு சொட்டு இரத்தமின்றியும் வெளியே வந்துவிட்டது. அந்த ஊசி இருந்த இடம் வலது ஆள்காட்டி விரலின் நுனியில் நகத்திற்கும், சதைக்கும் இடையில் இருந்தது. அந்த சக்திக்கு அளவற்ற மகிழ்ச்சி. இத்தனை நாள் வேதனைபடுத்தியவர்க்கு அன்று அவர்களுக்கு விடிவு காலம் பிறந்தது. வீட்டிற்கு செல்ல இருந்தவரை அம்மா அவர்கள் தடுத்து அந்த அற்புதத்தை நடத்தினார்கள். 24.3.2019 அன்று கண் முன்னால்நடந்த அற்புத நிகழ்ச்சி இது. அம்மா அவர்களின் அற்புதமே அற்புதம்.