சேவைகள்

அன்னதானப் பணி

எல்லாப் பணிகளிலும் சிறந்த பணி அன்னதானப்பணியே. பசி என்று வருபவா்க்கு வயிறார உணவளித்து அவா்கள் மனமும் வயிறும் குளிர வைப்பதே தமிழா்களின் பாரம்பரிய பண்பாகும். அந்த வகையில்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆலயத்தில் அன்னதானப் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  நமது ஊழ்வினைகளைக் குறைப்பதற்காக அன்னையே எமக்கு அன்னதானம் செய் என்று கட்டளையிடுகின்றாள். அவ்வாறு நீ அன்னதானம் செய்யும் போது முன்வினையில் உன்னால் பாதிக்கப்பட்டோரை அன்னதான முன்வரிசையில் உணவருந்த வைத்து உன் ஊழ்வினைகளைக் குறைப்பேன் என்று அன்னை அருள்வாக்கில் கூறியிருக்கிறாள். மேல்மருவத்துாரில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களிற்கும் ஒவ்வொரு ஊா்களிரிருந்து வரும் ஆதிபராசக்தி மன்ற இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் முறையே அன்னதானப் பணிகளைச் செய்து தொண்டா்கள் வயிறார உணவருந்த வழி செய்கின்றார்கள்.  நாமும் இயன்ற வரை அன்னதானம் செய்து அன்னையின் திருவருளை வேண்டுவோம்.

மருத்துவப்பணி

மேல்மருவத்துாரின் பணிகளின் சிறப்பான பணிகளில் இதுவும் ஒன்றாகும்.குறிப்பாக அருள் திரு அடிகளாரின் அவதாரத்திருநாளை முன்னிட்டு  ஏழை மக்களுக்கு இலவசமாக கண்சிகிச்சை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் அருள்திரு அம்மா அவா்களின் 70-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு 2010 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 13ம் திகதி சனிக்கிழமை (13.02.2010)  காலை 7.00மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கண் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். தேர்வு செய்யப்படுவோர்க்கு 13.02.2010 – 14.02.2010 ஆகிய இரு நாட்களிலும் இலவசமாக கணி அறுவை சிகிச்சை செய்யப்படும். நாமும் எம்மால் முயன்ற அளவு மருத்துவப் பணிக்கு நன்கொடைகளை வழங்கி அன்னையின் திருவருளை வேண்டுவோம்.

கல்விப்பணி

மேல்மருவத்துாரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லுாரி வரை சிறப்பான முறையில் சிறந்த ஆசிரியா்களால் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இங்கு கல்வி பயிலும் மாணவா்கள் கல்வியுடன் சோ்ந்து ஆன்மிகத்தையும் வளா்த்துக்கொள்கிறார்கள்.

 
 சமுதாயப்பணி

மேல் மருவத்துார் ஆதிபராசக்தி இயக்க மன்றங்கள் ஊடாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறுபட்ட சமுதாயப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. மாணவா்களுக்கு கணணிகள், ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், தொழில் செய்வோருக்கு இட்டலி கொப்பறைகள், தையல் இயந்திரங்கள், வெல்டிங் கருவிகள், துளையிடும் கருவிகள், மா அரைக்கும் இயந்திரங்கள், சைக்கிள்கள், மீன் தொழில் செய்வோருக்கு மீன் வலைகள்  வழங்கல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன.