தீய பழக்கங்களைக் கைவிடுக!

0
5944

“ஒருவரிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தாலும், ஒன்றிரண்டு தீய பழக்கங்களும் இருக்கலாம். எண்ணெயும் தண்ணீரும் கலந்து இருந்தாலும் தண்ணீரில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பதைப் போல, ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தீய பழக்கங்களைத் தாங்களே உணா்ந்து பிரித்தெடுத்து, அதைத் தங்களிடமிருந்து விலக்கி விடுவது மிகவும் முக்கியம்.

உலகில் அநீதி அதிகமாகும் பொழுது இயற்கையும் சீற்றம் கொள்ளும்.

குழந்தை தாயை அடிக்கும் போது தாய் தாங்கிக் கொள்வாள். ஆனால் தாய் குழந்தையை அடித்தால் தாங்காது. இயற்கை தாய் போன்றவள்.

பாதரசம் வெப்பத்தால் விரிவடைந்து அதிகமான அழுத்தம் ஏற்படும் பொழுது வெடித்து விடுகிறது. அதைப் போலவே உலகில் அநீதி அதிகமாகும் பொழுது, இயற்கையும் சீற்றம் கொள்ளும்.

நாம் மக்களுக்காகத் தீட்டுகின்ற எந்தத் திட்டமானாலும் இயற்கையின் பங்களிப்பு அதில் நிச்சயமாக இருக்கும்.”

ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அருளிய குரு உபதேசங்கள்