கனவிலேயே தீர்வு பாகம்-3

விரும்பியவரை மணக்க முடியாமல் தடை

    நான் குடியிருந்த ஊரிலேயே என் சொந்தக்கார இளைஞர் ஒருவரை நேசித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். அவர் சிவில் எஞ்சினீயரிங் படித்தவர். நான் B.B.A முடித்துவிட்டு வீட்டில் இருப்பவள். அவர்கள் வசதி பெற்றவர்கள். இன்றைய நாகரிகத்திற்கு ஏற்றபடி வாழத் தெரிந்தவர்கள். நாங்கள் வசதியிருந்தும் அவர்களைப் போல நாகரிகமாக வாழ விரும்பாதவர்கள். இதைக் காரணமாக வைத்து எங்கள் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.

    உடனே அம்மாவிடம் வந்து பாதபூஜை செய்தேன். என்னைப் பார்த்து, எல்லாவற்றையும் நான் நன்றாக நடத்தித் தருகிறேன் என்றாள். எல்லாவற்றையும் என்றால்…….?நம் மனதில் இருப்பது அம்மாவுக்கு எப்படித் தெரிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அம்மாவுக்கு இருப்பது இரண்டு கண்கள் அல்ல ! ஆயிரம் கண்கள் ! என்று அன்றுதான் நான் உணர்ந்தேன்.

    அம்மா அருளால், கற்பனைக்கு எட்டாதபடி என் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. அதிசயிக்கத் தக்க முறையில் எங்கள் வீடு தேடிப்பணம் வந்தது.

நிலத்தை விற்க விடாமல் ஒருவன் தடை செய்தது

    எங்கள் வயலில் ஒரு பகுதியை நாங்கள் விற்க முடியாதபடி, வழக்கு போட்டும், பலரிடம் தூண்டுதல் செய்தும் விற்க விடாமல் ஒருவன் தடை செய்தான். அதையும் மீறி நிலத்தை வாங்க ஆட்களை அனுப்பி, மூன்றரை ல்ட்சத்துக்கு அம்மா விற்க அருள் பாலித்தாள். எங்கள் பழைய வீட்டைப் புது வீடாக மாற்ற முடிந்தது. பழைய விவசாயக் கடன்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. எல்லாவற்றையும் கூட்டுவித்தது அம்மாவின் அருள் !

    எங்களை ஏளனம் செய்த சொந்த பந்தங்களும், சுற்றமும் எல்லாம் வாயடைக்கும்படி அம்மா எங்கள் திருமணத்தை நடத்தியது மிகப் பெரிய அற்புதம் !

    பணம் இருப்பவர்கட்கு மட்டும்தான் வாழ்க்கை ! ஏழைகள் வாழ முடியாது என்று நினைக்காதீர்கள் ! அம்மா அருள் என்ற ஒன்று இருந்தால் போதும் ! எந்த வழியிலாவது இறங்கி வந்து அம்மா நம்மைக் கைகொடுத்துக் காப்பாற்றுவாள்.

    அம்மாவைச் சரண் அடைந்து விட்ட பிறகு, எவ்வளவு வேதனை, சோதனைகள் வந்தாலும் அம்மாவை மறந்து விடக்கூடாது.

நன்றி

சக்தி. ராஜலட்சுமி     பிரம்ம தேசம், பெரம்பலூர் மாவட்டம்.

சக்தி ஒளி அக்டோபர் 2009, பக்கம் -34 .

]]>