மருவத்தூர் மகானே!

மருவூரார்! மருவத்தூர் மகானே!  உனை காணாமல்  என்னால் இருக்க  முடியவில்லை!  உனை எண்ணாது நெஞ்சு துடிக்க முடிவதில்லை! உன்னிடம் வந்த.. ஒவ்வொரு நொடியும்.. உன்னதமான  நினைவலையில் ஒவ்வொரு நாளும் விடியும்! மவுனத்தில்  இருந்தாலும் மகத்தான நாடகம்..என மறுபடிதானே புரியும்! அவரவர்க்கு தகுந்த  ஆன்மீக பாதையை.. அள்ளி தந்தாயே.. அனுபவம்தானே  அறியும்! எந்த கோயிலில் ... எங்கு சென்றாலும். . உந்தன் பெயரையே.. சொல்லி வணங்குவதே எந்தன் மனதினில் பதியும்! பாசமே... கிடைக்காத பரிதவித்த நெஞ்சுக்கு.. பாசத்தை  ஊட்டி விட்டாய்! இரும்பினை...

உன்னருகில் வந்ததுதான் தெரியும்!

மருவூரார்! உன்னருகில்  வந்ததுதான் தெரியும்!  உணர்வலைகள்  என்ன ஆச்சு. மயக்கம்!  உன்.. விழியை கவனித்தேனா? மொழியை கவனித்தேனா? உதடசைவை  கவனித்தேனா? அங்கு நடப்பதை நினைத்தானா? புரியாத உலகுக்கு  போய் வந்தேன்! புரிந்தாலும் கூறமுடியா ஊமையாய் நின்றேன்! சுற்றி உள்ளவர் கூறுவது உரைக்கவில்லை! சுயநினைவு இல்லையே.. குருநாதா. . என்ன சொன்னாய் நினைவில்லை! பற்றிய பாதத்தில்  மலரிட்டேன்! பரலோக சுகமதில் மிதந்திட்டேன்! சொல்கிறேனா.. உளறுகிறேனா.. புரியவில்லை. . சொல்லவந்த  வார்த்தைகளும்.. வரவுமில்லை! மறுபடியும் மறுபடியும்  உனது மொழி... ஒலிக்குது ஒலிக்கிது.. செவியின் வழி! கருவறையா.. அருட்கூடமா.. புரியவில்லை! கணநேரம் மறந்தநிலை அறியவில்லை! உன்னருகில்...

பணம் என்ன செய்யும்

"பணம் என்ன செய்யும்"...? " பதவிதான் என்ன செய்யும்"..?? "பகை என்ன செய்யும்"...?? "பாவிதான் என்ன செய்வான்...??? " பங்காரு பாலகனின் பாதங்களை பற்றிக் கொண்டு...., " பராசக்தி ஆலயத்தில் "..., " தொண்டு செய்யும் அடியவனை".....!!! "விதி என்ன செய்யும்"....? " வேதனைதான்...

மருவூரார்!

எதற்கெம்மை படைத்தனை இடருறும்போ  தணைத்தனை... சிதறாதெமை சேர்த்தனை.. சிறகெனநீ இருந்தனை... உதறிடாதுள நிலையினை. உணர்ந்தபத இறையனே.. பதறவிடா வெள்ளரி.. பழவீடெமெக் கருளனே!... அய்யா... மருவூர் வாழ்.. மகாதேவா.... மருந்தாலும் அன்பாலும் மாறா பழவினை.. இருந்தாலே என்செய்வேன் விழிஒளி எரிஇனி! அருந்தவம் தொண்டுதுதியு ஆற்றா வயதினி.. தரும்வழியு மனமறக்கும் தடுமாறுந் நிலைசனி.. பருந்தாகி வந்தெமை.. பற்றியருள் பரமனே..! ? ....சபா ஸ்ரீமுஷ்ணம். ..

திருபாதம் தருவாயே

இறந்தாலும் , இருந்தாலும்..!! பிறந்தாலும் , மறந்தாலும்..!! துறந்தாலும், சிறந்தாலும்...!! நிறைந்தாலும், உறைந்தாலும்...!! திறந்தாலும் ,மறைந்தாலும்..!! மலர்ந்தாலும், உலர்ந்தாலும்...!! #இறையான_மறையோனை #இனி_யானும் #பிரியேனே....!! குருவான பகவானே....!! நிறைவான திருமாலே...!! குருவான யுகவானே....!! பெருஞான பெரியோனே...!! " பிறைஞான பெருமானே"...!! "பிழையாவும் " "பொறுப்பாயே...!! #திருஞான_மலரோனே...!! #திருபாதம்_தருவாயே...!! ???????????? ...சபா ஸ்ரீமுஷ்ணம். ...

தெறிப்புகள்

கவிதைகள்