என்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘’தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன் ஆறு மாதங்கள் இருந்துவிட்டுப் பிறகு யாரிடமும் எதுவும் சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டான்.

இதனை அறிந்து அந்தப் பையனின் பெற்றோர்களும், நானும் ஒரு வருடமாக தேடினோம். பல இடங்களில் தேடிப் பார்த்தோம்; சோதிடம் கேட்டோம். பல சாமியார்களிடம் முறையிட்டுக் கேட்டோம். எந்தவிதப் பயனும் விளையவில்லை. காணாமற் பேன அந்தப் பையனின் பெற்றோர்கள் பையனை ஒப்படைக்க வேண்டும் என்று பல வகையிலும் தொந்தரவு செய்தனர். அந்தப் பையனை வேளையில் அமர்த்தி இருந்த என்னுடைய மகன் மீது கொலைக்குற்றம் சுமத்திக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அவனைக் கொலைக் குற்றவாளி ஆக்க முயற்சி செய்தார்கள். இந்த நிலையில் என்னுடைய நண்பர் ஒருவர் ‘’இதயம” பத்திரிகையில் வெளியிடப்பட்டு வந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் வரலாற்றைப் பற்றியும், மகிமை பற்றியும் என்னிடம் சொன்னார். பொள்ளாச்சியில் நடை பெற்ற ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் விழாவின் போது அருள் திரு.பங்காகு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்ததை சொன்னார். எலுமிச்சை கனியைப் பெற்றதனையும் சொன்னார். ஆனாலும் நான் நம்பவில்லை.

என் நண்பரின் விடா முயற்சியாலும் தெய்வத்தின் சக்தி யாலும் கிணத்துக்கடவு அருள் மிகு பொன்மலை வேலாயுதசாமி கோயிலில், மேல்மருவத்தூர் செல்வதற்கு பூ கேட்டதில் அன்னையின் சந்நிதிக்குச் சென்றவர்கள் எல்லா நன்மையும் கிடைக்கும் என்று உத்தரவு கிடைத்தது. பிறகே நான் மேல்மருவத்தூர் வந்தேன். அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டேன்; அங்ககப் பிரதட்சணம் செய்தேன்; மூன்று நாள் தங்கியிருந்த பின் அருள்வாக்குப் பெற்றேன்.

அன்னை அருள்வாக்கின் போது ‘’மகனே! நீ தேடுகின்ற பொருளுக்குக் கூட அழிவில்லை; மேற்கொண்டு ஆக வேண்டியதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று கூறி அனுப்பினாள். ஒரு மாதம் கழித்து காணமல் போன பையனின் பெற்றோர்கள் மேலும் தொந்தரவு கொடுத்தார்கள். மறுபடியும் மேல்மருவத்தூர் சென்றேன். ‘’தாயே நீதான் வழிகாட்ட வேண்டும்; காணாமல் போன பையனை என்னிடத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று மனம் உருகி அன்னையை வேண்டிக் கொண்டேன். அன்றும் அருள்வாக்குப் பெற்றேன்.

அன்னை என்னிடம்; உன் ஊள்வினையின் காரணமாகத்தான் அவன் சென்றுவிட்டான். யாரையும் குறை கூற வேண்டாம். உன் வீட்டில் இருந்து மண் எடுதுக் கொண்டு வா” என்று உத்தரவு இட்டாள்.

அதன்படி மண் எடுத்துக் கொண்டு என் குடும்பத்துடன் மேல்மருவத்தூர் சென்றேன். நான் எடுத்துக்கொண்டு சென்ற மண்ணை அன்னை மந்தரித்துக் கொடுத்தாள். ‘‘மகனே! நீ ஊருக்குச் சென்று இந்த மண்ணை வீட்டில் எடுத்த இடத்தில் வைத்து, எலும்மிச்சம் பழத்தையும் வைத்துத் தினம் தீபம் வைத்து என்மனை வணங்கி வா!’ என்று
கட்டளை இட்டாள்.

அப்படியே நான்கு மாதங்கள் வழிபட்டு வந்தேன். 2-9-82 அன்று காலையில் பையன் கிடைத்து விட்டான். என்ற தந்தி எனக்கு கிடைத்தது. பையன் இருக்குமிடம் சென்று பார்த்து எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைந்தேன். எப்படியோ பையன் கிடைத்து விட்டான் கொலைக் குற்றவாளி ஆக்கம் முயற்சிகள் எல்லாம் நடந்தன. அந்தப் பழியிலிரு ந்து அன்னை ஆதிபராசக்தி மீட்டாள். எல்லாம் அவள் அருளே!

ஓம் சக்தி
நன்றி: சக்தி ஒளி
விளக்கு :2 சுடர் :1
பக்கம் : 32-33

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here