“அம்மா! எத்தனையோ பேர் உன்னை நினைத்துக் காடுகளிலும், மலைகளிலும் தவம் இருக்கிறார்கள். இன்றைக்கும் இமயமலை அடிவாரத்தில் தவமிருப்பதாக சொல்கிறார்கள். அப்படிபட்டவர்களையெல்லாம் விட்டு விட்டு இந்தப் பாலகன் (அடிகளார்) மூலமாக வெளிப்பட்டு அருள்வாக்குச் சொல்கிறாயே! அது ஏன்?” என்று வினவினார். அப்போது தான் அடிகளாரின் ஆன்ம பரிபக்குவத்தை உணர்த்தினாள் அன்னை. “மகனே! சாலையில் மனிதர்கள் போகும் போது இவன் ஆண்! இவள் பெண்! இவர்கள் மனிதர்கள்! இவைகள் மாடுகள் என்று பிரித்துப் பார்க்கிற பேத புத்தி உங்களுக்கெல்லாம் உண்டு. பாலகன் அத்தகையவன் அல்ல! எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கிறவன் அவன். அவனது ஆன்ம பரிபக்குவம் உங்களுக்கெல்லாம் எட்டாது” என்றாள். “எல்லா உயிர்களையும் பரம்பொருள் வடிவமாகப் பார்க்கிறவன் எவனோ அவனே பிரும்ம ஞானி!” என்று உபநிடதங்கள் பேசுகின்றன. “பார்க்கின்ற பொருளூடு நீயே இருத்தி! ” என்றார் தாயுமானவர். அத்தகைய பரிபக்குவத்தை அடிகளார் பெற்று இருந்தார். அதுகருதியே அன்னை, அவரது ஆன்மா மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். அருள்வாக்கும் அளித்து வந்தாள். “இரண்டாயிரமாண்டுகளாக என்னை நோக்கித் தவம் இருந்தவனடா அடிகளார். அவனது தன்மை என்னவென்று உங்களில் யாருக்கும் தெரியாது” என்று இன்னொருவருக்குச் சொல்லி உணர்த்தினாள்.. தொடரும்….

]]>