1. அகன்ற வாயுடைய ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து அதன் வெளிபுறத்தில் மூன்று இடங்களில் மஞ்சள்,குங்குமப் பொட்டு இட்டு அதைச் சுத்தமான நீரால் முக்கால்ப்பகுதி நிரப்ப வேண்டும்.



2. அப்பாத்திரத்தின் அருகில் ஒரு காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து ஊதுவர்த்தி, தொடர் கற்பூரம் ஏற்ற வேண்டும்.
3. “ஓம் சக்தி! பராசக்தி!” என்ற அன்னையின் திருமந்திரங்களை இடைவிடாமல் ஒலிக்க வேண்டும்.
4. அச்சமயம் கிழக்கு நோக்கி நின்றுகொண்டு முறையாகக் கீழ்க்கண்ட பொருட்களைப் பாத்திரத்தில் இட வேண்டும்
1. மஞ்சள் தூள்
2. குங்குமம்
3. விபூதி
4. சந்தனத் தூள்
5. கலசத் தீர்த்தப்பொடி
5. ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி, வால்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், பச்சைக்கற்பூரம், குங்குமப் பூ, ஆகியவை கலந்த பொடி கலசத்தீர்த்தப் பொடி
6. நல்ல வாசமுள்ள பன்னீரையும் தேவையான அளவு ஊற்றவேண்டும்.
7. அதன்பின் ஒன்பது அல்லது ஏழு வேப்பிலைகளைப் போட்டு கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும்.
8. தீர்த்தத்தினை ஒரு கற்பூரத்தை ஏற்றி மிதக்கும்படி விட்டு, திருடி பிழிய வேண்டும்.
9.திருஷ்டி முடிந்தவுடன் அன்னையின் மூல மந்திரம், 108 போற்றித் திருவுரு படிக்க வேண்டும்.
10. இம் முறைப்படி தயாரிக்கப்படுவதே கலச தீர்த்தம்

 

 

 

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here