“நான் சில நேரங்களில் பக்தா்களுடன் அடிகளார் உரையாடுவதை உற்று நோக்குவேன். அப்போது பல தத்துவங்களை அடிகளார் அருளியதை உணா்ந்தேன்.

ஒருமுறை ஒரு பெண்மணி தனக்கு விரதம் இருந்து, பூசை முறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டு கூறினார்.

அதுகேட்டு அடிகளார், “ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரை மணி நேரத்தைத் தெய்வ வழிபாட்டிற்கு ஒவ்வொருவரும் செலவழித்தாலே போதும் என்று கூறினார்கள்.

நான் ஒரு முறை மனவருத்தத்தோடு பூசையை முடித்துவிட்டு அடிகளாரிடம் சொன்னேன்.

“இன்று நான் அம்மாவுக்குப் பூசை செய்யும்போது எங்களுக்கே இவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறாயே…… மற்றவா்கள் எம்மாத்திரம் என்று கேட்டேன்”

அது கேட்டு அடிகளார், “பூசை செய்யும்போது, மன நிறைவோடும் மன மகிழ்ச்சியோடும் பூசை செய்ய வேண்டும். எந்தக் குறையையும் மனத்தில் வைத்துக் கொண்டு பூசை செய்யக் கூடாது. அப்போது தான் நீ செய்யும் பூசை முழுமை அடையும்” என்று கூறினார்கள்.

ஆகவே, ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரத்தையாவது நாம் தெய்வ வழிபாட்டிற்குச் செலவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் மன மகிழ்ச்சியோடு வழிபாடு செய்ய வேண்டும்.

திருமதி அடிகளார்

சக்தி ஒளி, மார்ச், 2007

பக்கம் 31

 ]]>

1 COMMENT

  1. அப்படியானால் நமது குறைகளை எப்போது அம்மனிடம் சொல்லி முறையிடுவது சக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here