என்னை வாழ வைக்கும் தெய்வம்!

0
1688

செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வழியில் கூடுவாஞ்சேரிக்கருகில் வல்லாஞ்சேரி என்னும் சிற்றூரில் நல்லாசிரியராகக் கல்வி நலம் புரிந்த இராச கோபலனார் என்பாரின் புதல்வனாகிய யான் தந்தையாரின் ஆணையின்படி பிறந்த மண்ணில் அருள்பாலிக்கும் அருள்மிகு வேம்பிலியம்மன் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தகாலை, மருவத்தூர் அன்னையின் அற்புதங்களையும், அடிகளாரின் அருட்செயல்களையும் என் மைத்துனர் சிறுநாகலூர் திரு.இராசேந்திரபாபு வழியாக அறியும் வாய்ப்பு கிட்டியிருந்தும் என் அறியாமை காரணமாக மருவத்தூர் செல்வதைத் தவிர்த்து வந்தேன்.

இந்த நிலையில் என் ஊழ்வினை காரணமாகவும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் எனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஒருவருடன் பிரச்சனை ஏற்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் என் பணி, கௌரவம், எதிர்காலம் உறவினர் அனைத்தும் பாதிக்கும் அளவில் குற்றவாளியாக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டேன்.

மேற்படி வழக்கிலிருந்து மீள வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நிலையில் மருவூர் அன்னையின் அணுக்கத் தொண்டரான மருத்துவர் திருமிகு ப.செல்வராசு அவர்களை அணுகியபோது, ‘‘நம்மால் முடிவது ஏதுமில்லை” எனக் கூறி மருவூர் அன்னையைச் சரணடையுமாறு அருளுரை வழங்கினார். யான் அவ்வண்ணமே சரணடைந்த போது அன்னை ‘‘என் மண்ணை மிதித்து விட்ட உனக்கு எந்தக் கெடுதலும் வராமல் காப்பேன்” என அருள்வாக்களித்தான்.

அன்னை மேலும், ‘‘மேற்படி வழக்கு உனக்குச் சாதகமாக முடியாது உன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு நீயே பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட நபரிடம் சமாதானமாகப் போ” என்று அருள்வாக்கருளினாள். அன்னையின் சக்தியை அறியாத யான், ‘‘சூழ்நிலையின்படி சமாதானமாகப் போக வாய்ப்பில்லையே” எனக் கூறியதற்கு, ‘‘சமாதானமாகப் போக வழிவகை செய்து உன்பணி, கௌரவம் எதிர்காலம் அனைத்தும் பாதிக்காமல் நான் காக்கிறேன்” எனக் கூறி அவ்வாறே நடத்தியும் காட்டினாள். நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து அருள் செய்துத் துன்பங்களிலிருந்து அறவே மீட்டு என்னை மனிதனாக வாழவைக்கிறாள்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 7 (1982)
பக்கம்: 42

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here