சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு (1986) நம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.

அன்று நம் சித்தர் பீடத்தில் ஏதோ ஒரு திருவிழா, செவ்வாடைத் தொண்டா்கள் இங்குமங்குமாகச் சுறுசுறுப்புடன் தொண்டாற்றிக் கொண்டிருந்தனா். ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் அருட்கூடத்தில் தம் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது…….. மூன்று நான்கு வெளிநாட்டு இளைஞா்கள், நம் சித்தா் பீடத்தின் விழாக்கோலத்தையும், செவ்வாடைத் தொண்டா்களின் கூட்டத்தையும் பார்த்து, நம் சித்தா் பீடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே வந்தனா். யாரோ வெளிநாட்டைச் சோ்ந்தவர்கள் நம் அம்மா பீடத்திற்கு வந்திருக்கிறார்கள். முடிந்தால் அவா்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று நம் தொண்டா்களில் ஒருவரான பேராசிரியா் ஒருவா் அவா்களுக்கு வழிகாட்டி உதவச் சென்றார். அவா்கள் ஜொ்மனி நாட்டில் இருந்து வந்தவா்களாம். ஆதிபராசக்தி சித்தா் பீடம் பற்றித் துருவித் துருவிக் கேட்டனா்.  பேராசிரியா் இயன்றவரை பதிலளித்து வந்தார். ”சுவாமிஜியைப் பார்க்க வேண்டும்” என்றார்கள். அவா்களைப் பேராசிரியா் நம் அடிகளாரிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். “யார் சார் இவா்கள்?” என்று அடிகளார் தமக்கே உரிய எளிமையோடு கேட்டார்கள். “அம்மா! இவா்கள் ஜொ்மனியிலிருந்து நம் நாட்டுக்கு வந்திருக்கிறார்களாம். யாரோ ஒரு சாமியாரிடம் சீடா்களாக இருப்பவா்களாம். இந்து மதம் பற்றி அக்கறையோடு தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நம் அம்மா பீடத்தைப் பார்க்கவும், அம்மாவிடம் ஆசி பெறவும் வந்திருக்கிறார்கள்” என்றார் பேராசிரியா். “அப்படியா? ரொம்ப சந்தோஷம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று விசாரித்தார்கள் அருள்திரு அம்மா. பேராசிரியா் அதனை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் கேட்டார். “நாங்கள் எங்கள் சுவாமிஜியிடம் தியானம் பயின்று வருகிறோம்” என்றார்கள். பேராசிரியா் மொழிபெயா்த்துக் கூறினார். அடிகளார் கேட்டவற்றையும், அவா்கள் அளித்த பதில்களையும் பேராசிரியா் தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறி வந்தார். “இவா்களுக்குத் தியானம் பழக வேண்டும் என்ற அக்கறை ஏன் வந்தது என்று கேளுங்கள் சார்?” என்றார்கள் அம்மா. “உலகம் இப்போது ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பூமிக்குள் தேக்கி வைத்துக் கொண்டுள்ளன. தப்பித் தவறி ஏதேனும் ஆபத்து நிகழலாம். எனவே அந்த அணு ஆயுதங்கள் வெடித்து உலகிற்கு அழிவு ஏதும் வந்துவிடக்கூடாது, உலகில் சமாதானம் நிலவ வேண்டும், அதற்காகவே இறைவனை வேண்டித் தியானம் பழகுகிறோம்” என்றார்கள். “தியானம் கடைப்பிடிப்பதன் மூலமாக அணு ஆயுதங்களைச் செயலிழக்க வைத்துவிட முடியுமா என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “தியானத்தினால் இயற்கையையே கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்று எங்கள் சுவாமிஜி கூறியிருக்கிறார்” என்றார்கள் அவா்கள். “அப்படி இயற்கையையே கட்டுப்படுத்துகிற அளவுக்கு இவா்களுக்கு இவா்கள் குரு தியானமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா? என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. “எங்கள் குரு அவற்றை இன்னும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனாலும் தியானத்தினால் அது சாத்தியம் என்று கூறியுள்ளார்” என்றார்கள் அவா்கள். “தியானத்தினால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதனை அந்தக் குரு செய்தாவது காட்டியிருக்கிறாரா? என்று கேளுங்கள் சார்” என்றார்கள் அம்மா. n“அப்படி எதுவும் எங்களுக்குக் காட்டவில்லை” என்றார்கள். “சார்! யாரோ ஒரு சாமியாரிடம் இவா்கள் ஏமாந்து கொண்டு வருகிறார்கள். இவர்களை வைத்து அவன் ஏமாற்றி வருகிறான்” என்றார்கள் அம்மா. இதனை அந்தப் பேராசிரியா் மொழிபெயர்த்துச் சொன்னதுதான் தாமதம்! அந்த ஜெர்மனிக்காரா்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “எங்கள் குருவை என்னவென நினைத்தக் கொண்டீா்கள்? அவா் கடவுளுக்குச் சமமானவா். அவரால் முடியாதது ஒன்றுமில்லை. இன்னொருமுறை எங்கள் குருவை அப்படிச் சொல்லாதீா்கள். அவா் இமயமலைச் சாரலில் பல்லாண்டு காலம் தவமிருந்தவா்” என்றார்கள். பேராசிரியா் இதனை அடிகளார்க்கு மொழிபெயா்த்துக் கூறினார். அது கேட்ட அம்மா, தம் குருவின்மேல் அவா்கள் வைத்திருந்த அபரிமிதமான பக்தியைக்கண்டு உள்ளுக்குள் மெச்சிக் கொண்டு, “பாவம் இவா்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள், சரி போகட்டும்!” என்றார்கள். அதுகேட்ட அவா்கள் பொறுமையிழந்து, தம் கைப்பையிலிருந்து பெரிய தாள் ஒன்றை அடிகளார் எதிரே மேசைமேல் விரித்து வைத்தனா். அதில் ஏதோ வரைபடம் போல அங்மிங்குமாக சில கட்டடங்கள், சில கோடுகள், சில புள்ளிகள். “தியானத்தின் மூலமாக இயற்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றுள் இரண்டு முறைகள் உண்டு. 1) Wave Method 2) Earth Method என்ற இரு முறைகளால் இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என எங்கள் குரு சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அவற்றை அநாயாசமாகத் தம் கரங்களால் ஒதுக்கித் தள்ளிய அடிகளார், வெறுமனே வாயால் சொன்னால் போதுமா சார்? நிரூபித்துக் காட்டினால் தானே சார்? அப்படிக் காட்டி உணா்த்த முடியாதபோது இதையெல்லாம் சொன்னால் எவன் நம்புவான்? என்றார்கள் அம்மா. அப்படியானால் தியானத்தினால் இந்த முறைகளைக் கொண்டு இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்கிறீா்களா? என்று கேட்டனா் ஜொ்மனிக்காரா்கள். n“முடியும்” என்றார்கள் அடிகளார். “அது எப்படி? எங்களுக்கு அதனை நிரூபித்துக்  காட்டுங்கள். நாங்கள் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம்” என்றார்கள். “அப்படியா? சரி! வாருங்கள்” என்று அருட்கூடத்துக்குப் பின்னால் இருந்த மணல் முற்றத்துக்கு அவா்களை அழைத்து வந்து வரிசையாக மணலில் அமர வைத்தார். அதன்பின் அவா்கள் எதிரில் ஏதோ ஒரு ஆசனம் போட்டுக் கொண்டு தியானத்திலமர்ந்தார் அடிகளார். வழக்கமாக மற்றவா்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு தானே தியானம் செய்வது வழக்கம்? அடிகளாரோ கண்களை விழித்தபடி ஆகாயத்தை நோக்கியபடித் தியானம் செய்தார்கள். சில நிமிடம் கழித்து எதிரிலிருந்த மூவா் தலையிலும் கையை வைத்து, அவா்களை எழுந்திருக்கச் சொன்னார்கள். எழுந்தார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் உட்கார்ந்திருந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்துப் பாருங்கள்” என்றார்கள் அடிகளார். அதன்படி கையை நீட்டிய ஒருவா், ஆ………! என அலறியபடிக் கையை இழுத்துக் கொண்டார். மற்றவா்களும் ஏதோ நெருப்பில் கையை வைத்தவா்கள் போலப் பட்டென்று இழுத்துக் கொண்டனா். என்ன சார்? ஏன் இப்படி அலறுகிறார்கள்? கேளுங்கள் சார் எனப் பேராசிரியரை நோக்கிக் கூறினார் அடிகளார். என்னவெனப் பேராசிரியா் விசாரித்தபோது, “நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் கை வைத்தால் தாங்க முடியாத அனல் கொதிக்கிறது. எங்களால் தாங்க முடியவில்லை. ஓா் இரும்புத் துண்டை வைத்தால் கூட உருகி விடுகிற அளவுக்கு அனல் வீசுகின்றது அப்பப்பா!” என்றார்கள். என்ன சார் சொல்லுகிறார்கள் இவா்கள்? என்று அடிகளார் ஒன்றும் தெரியாதவரைப்போலப் பேராசிரியரைக் கேட்டார்கள். “அம்மா! எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ வெறுந்தரைதான் கண்ணுக்குத் தென்படுகிறது. இவா்களோ இரும்பையும் உருக்கும் அளவுக்கு அனல் வீசுகிறது என்கிறார்கள்!” என்றார் பேராசிரியா். நான் என்ன சார் செய்துவிட்டேன்? வெறுமனே தொட்டுத்தானே எழுப்பினேன். அனல், நெருப்பு எல்லாம் எப்படி வந்தது? என்று திரும்பிக் கேட்டார்கள் அடிகளார். அதுகேட்டுப் பேராசிரியரும் அந்த ஜோ்மனிக்காரா்களும் திருதிருவென விழித்தபடி நின்றனா். அதன்பிறகு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி அடிகளார் சொன்னார்கள் “இதோ பார்! ஆகாய வெளி முழுவதும் சக்தி மிதந்தபடிதான் இருக்கிறது. அந்தச் சக்தியைத்தான் நான் தியானத்தின் மூலமாக வாங்கினேன். அதை எப்படி வாங்க வேண்டுமென்று தெரியுமா? கண் வழியாக வாங்க வேண்டும். அப்படி வாங்கிய சக்தியைக் கீழே போகாதபடி உடம்புக்குள்ளே (Rotate) சுழலச்செய்து கொள்ள வேண்டும். அப்படி நான் வாங்கிய சக்தியைத்தான் உங்கள் மூவருக்கும் கொடுத்தேன். அதனை உங்களால் தாங்க முடியவில்லை. இப்போது அந்தச் சக்தி பூமிக்குள் வேகமாக இறங்கிக் கொண்டே போகிறது. நீங்கள் கூறிய Wave Method என்பது இது தான், என்று விளக்கினார்கள் அடிகளார். ரொம்ப சந்தோஷம், Earth Method என்கிறார்களே அதனையும் எங்களுக்கு உணா்த்த வேண்டும் என்றார்கள் அந்த ஜொ்மன்காரா்கள். “அப்படியா! சொல்கிறேன்!” என்று கூறி மீண்டும் அங்கே தியானத்தில் ஆழ்ந்தார்கள் அடிகளார். ஏதோ ஓா் ஆசனம்! ஏதோ ஓா் தியானமுறை, ஏதோ ஒரு தியான முத்திரை போட்டுக்கொண்ட சில நிமிடங்கள் அமா்ந்திருந்தார்கள். பின் எழுந்து, தான் அமா்ந்திருந்த இடத்தில் இருந்த கொஞ்சம் மண்ணை எடுத்து ஒவ்வொருவா் கையிலும் கொடுத்துத் தின்னுமாறு கூறினார்கள். “How is it possible? It is sand!” (“இது எப்படி முடியும்…..? இது மணல்”) என்றார்கள் அவா்கள். “ஒன்றும் ஆகாது சார்! வாயில் போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள், தின்னச் சொல்லுங்கள் என்றார்கள் அடிகளார். ஆனாலும் அவா்கள் தயங்கினார்கள். வெற்று மணலை வாயில் போட்டுக் கொண்டு தின்னச் சொன்னால் எப்படி? தயங்கினார்கள். “சரி! ஓரிரண்டு மணல் துகள்களை வாயில் போட்டுக் கொண்டு எப்படி இருக்கிறது? என்று சொல்லச் சொல்லுங்கள்” என்றார். அவா்களும் அப்படியே செய்தார்கள். “அட! மணல் இனிப்பாக இருக்கிறதே” என்றார்கள். இவ்வளவையும் உடனிருந்து கவனித்து வந்த பேராசிரியா், “அம்மா! இந்த மணல் இனிக்கிறதாம்!” என்றார். கையில் உள்ள மணல் எப்படிசார் இனிக்கும்? என்ன சார் கதை அளக்கிறார்கள்? என்றார்கள் அடிகளார் ஒரு கேலிச் சிரிப்போடு. பேராசிரியா் விழித்தார். “சரி! சரி! கையில் உள்ள மணல் எல்லாமே இனிப்பாகத்தான் இருக்கும்! அவ்வளவையும் வாயில் போட்டுக் கொண்டு சாப்பிடச் சொல்லுங்கள்” என்றார்கள். ஜேர்மனிக்காரா்கள் கை மணல் முழுவதையும் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டார்கள். அவ்வளவும் இனிப்பு! எப்படி இது சாத்தியம்? என்று அவா்தம் விழிகள் அடிகளாரைக் கேட்டன. அடிகளார் சொன்னார்கள், “மற்றவா்களாயிருந்தால் மணலை எடுத்து அதனைச் சா்க்கரையாக மாற்றிக் காட்டி அதன்பின் தின்னக் கொடுப்பார்கள். நான் மணலை மாற்றாமலே கொடுத்தேன். மணலைக் கொடுத்து அதன் இயற்கைத் தன்மையை மட்டும் தியானத்தால் மாற்றிக் கொடுத்தேன். இனிப்புள்ளதாக மாற்றிக் கொடுத்தேன். தியானத்தால் ஒரு பொருளின் தன்மையை மாற்றலாம். நீங்கள் கேட்ட Earth Method இதுதான்” என்றார். அந்த ஜேர்மனிக்காரா்கள் அனைவருமே வாயடைத்துப் போய் நின்றுவிட்டனா். “அது சரி! தியானத்தால் இயற்கையை இப்படி மாற்ற முடியும் என்பது, தெரிகிறது. ஆனால் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கொடுப்பது எப்படி?” என்று கேட்டார்கள். அது கேட்ட அடிகளார், “நீங்கள்தான் ஜொ்மனிக்காரா்கள் ஆயிற்றே? உலகத்திலேயே விஞ்ஞான மூளை பலம் பெற்றவா்கள் என்று உங்கள் நாட்டுக்காரா்களைத்தானே சொல்கிறார்கள்? நீங்கள் இதற்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தேடிப் பாருங்களேன்?” என்றார்கள் அடிகளார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த அந்த ஜெர்மனிக்காரா்கள், “எங்களை உங்கள் சீடா்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனா். “சீடா்களாக ஏற்றுக் கொள்வது பற்றி இப்போது என்ன அவசரம்? சீடர்களாக உங்களை நான் ஏற்க வேண்டுமானால், முதலில் என்மேல் அழுத்தமான நம்பிக்கை வரவேண்டும், பக்தி வரவேண்டும், பக்குவம் வரவேண்டும், பிராப்தம் வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும். அதெல்லாம் அப்புறம்” என்று பிடி கொடுக்காத அடிகளார் “மீண்டும் நீங்கள் இந்தியாவுக்கு எப்போது வருவீா்கள்?” என்று திருப்பிக் கேட்டார்கள். அவா்கள் ஏதோ ஒரு வருடக் கணக்கு சொன்னார்கள். “அப்படி நீங்கள் இங்கே புறப்பட்டு வருகிறபோது, உங்கள் மூவருக்கும் என் சக்தியை அனுப்பி உங்கள் வீட்டுக்கு வந்து அழைப்பேன். அது எப்படி உங்களை அழைத்தது? எப்படி வந்தீா்கள்? என்பதை உலகறிய உங்கள் நாட்டுக்காரனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். எங்கள் நாட்டுக்காரனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் செய்வீா்களா?” என்று கேட்டார்கள் அடிகளார். “ஆகா! அப்படியே சொல்கிறோம்” என்று விடையளித்தனா். அடிகளார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, நல்லாசியுடன் விடைபெற்றுச் சென்றனா். “தியானத்தால் அடைய முடியாதது எதுவுமே இல்லை” என்பது அன்னையின் அருள்வாக்கு ஆன்மிக சாம்ராஜ்யத்துக்குள்ளே இருக்கிற மறைபொருளை அறிய வேண்டுமாயின் புலனடக்கம், மனக்கட்டுப்பாடு முதலியன தேவை. ஐம்புலன்களை அடக்கினால் ஐம்பூதங்களையும் அடக்கலாம்” என்பது அன்னையின் அருள்வாக்கு. உலக மக்களில் நூற்றுக்கு 99 போ் மனம் போன போக்கில் வாழ்பவா்கள். இவா்கள் மனம் காமத்தாலும், காசு ஆசையாலும், பந்த பாசத்தாலும் தடிப்பேறிப் போயுள்ளது. இப்படிப்பட்ட அடிமட்டத்தில் படித்தவனும் கிடக்கிறான், பாமரனும் கிடக்கிறான். இத்தகைய அடிமட்டத்தில் இருந்துகொண்டுதான் பகுத்தறிவு, அது இது என்று பேசுகிறான். ஆன்மிகத்தில் உள்ள பல நுட்பங்களை அறிய வேண்டுமானால் பகுத்தறிவுக்கு அப்பால்தான் தாண்டிப் போக வேண்டும். பகுத்தறிவைக் கடந்து சென்றுதான் ஆன்மிக உலகின் மறைபொருளையெல்லாம் உணரமுடியும். அதற்கு நுழைவாயில் தியானம். இயற்கையின் சட்டத்தில் அடிக்கடி ஞானிகள் தலையிடமாட்டார்கள். திருவருள் இசைந்தால்தான் சில வல்லபங்களை, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்கள். அடிகளாரும், அன்னையும் கடலடா! அடிகளாருக்குள் புதைந்துள்ள பொக்கிஷத்தை இங்குள்ள எவனாலும் அளக்க முடியாதடா! என்று அன்னையே அருள்வாக்கில் சொல்லிக் காட்டினாள். பொதுவாகத் திருவருள் ரகசியங்களையும், தெய்வ ரகசியங்களையும் குருமார்கள் தான் பக்குவம் வாய்ந்த சீடா்களுக்குத் தெரிவிப்பார்கள். ஆனால் மேல்மருவத்தூரிலோ பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தியே இறங்கி வந்து, அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்து, அடிகளாரின் மகத்துவத்தை இங்கே புரிய வைக்க வேண்டியுள்ளது. ஏன்? நம் ஆன்மிக நாட்டமும் அருள்தாகமும் அந்த அளவுக்கு உள்ளன. துரும்பைக் கொண்டு கடலை அளக்க முயல்வது போல உலகம் தன் சிற்றறிவு கொண்டு அடிகளாரை அளந்து பார்க்க முயல்கிறது. சித்தா்கள் பெரிய புதிர்! அடிகளார் புதிர்களுக்கெல்லாம் புதிராக உள்ளவா். ஏதோ வருபவனிடமும், போகிறவனிடமும் சார்! போட்டு அழைத்துப் பேசுவதனால் நம்மைப் போலத்தான் இவரும் என்று எண்ணிக் கொள்கிறார்கள். செவ்வாடைத் தொண்டா் குலம் இந்த நுட்பங்களையெல்லாம் அறிந்துகொண்டு அடிகளார் என்கிற சித்த புருஷரை, அவதார நாயகரை அடையாளம் கண்டு கொண்டு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் பிறவியோடு நம் கணக்கைத் தீா்த்துக்கொண்டு அன்னையிடம் போய் ஒட்டிக் கொள்ள வேண்டும். இனி எந்த ஒரு யுகத்தில் பரம்பொருள் அவதார நோக்கம் கொண்டு இறங்கி வரப்போகிறது….? நன்றி. ஓம் சக்தி! சக்தி ஒளி – விளக்கு – 8, சுடா் – 2 டிசம்பா் 1989 ல் வெளிவந்த கட்டுரையிலிருந்து சக்தி ஒளி – டிசம்பா் 2008    ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here