சித்தா் பீடத்தில் அடிக்கடி வந்து தொண்டாற்றும் மந்திரம் கற்ற அன்பா் ஒருவா் இருந்தார். தாடிக்காரப் பெரியவா் ஒருவரும் வந்து கொண்டிருந்தார். ஒருநாள் இவா்களை நோக்கி அன்னை “மகனே! மகனை மகனாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. 13.4.79 இரவு தொடங்கி 14.4.79 விடியற்காலத்துக்குள் அபிடேகம் செய்ய வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்க!” என்று ஆணையிட்டாள். மந்திர அன்பா் தாயே! எவ்வாறு அதனைச் செய்ய வேண்டும் என்பதை நீயே சொல்லி அருள வேண்டும்” என்று வேண்டுகோள் விட்டார். மகனே! உனக்கே என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவ்வாறே செய் தேவையான திருத்தங்களை நான் சொல்வேன்!” என்றாள் அன்னை.

அன்னை சொல்லிய அபிடேக முறை

மகனே! நான் கூறுவதைக் கவனமாகக் கேள்! இவற்றை மிகக் கவனத்துடன் செய்யுங்கள்! “மகா சோடசி” மந்திர நியாசத்தை நீ செய் மகனே! நான் வந்த வினாடியிலிருந்து அபிடேகம் முடிந்து பாதபூசை நடைபெற்று முடிகிற வரையில் என்னை யாரும் தொடக்கூடாது. தாடிக்காரன் ஒருவன் மட்டுமே என்னைத் தொடலாம். அபிடேகத் தீா்த்தம் முழுவதையும் அவன் ஒருவனே அபிடேகம் செய்ய வேண்டும்”

“சகஸ்ராரா”வை (தண்ணீா் சல்லடை) இவனும் இவன் மனைவியும் ஒருபுறமும், (இன்னொருவரைக் காட்டி) இவனும் இவன் மனைவியும் மற்றொரு புறமும் பிடிக்கட்டும். 108 அா்ச்சனை, பாதபூசை முழுவதும் தாடிக்காரன் ஒருவனே செய்ய வேண்டும். இந்த இடைவேளையில் யாரேனும் என்னைத் தொட்டால் தீங்கு விளையும் என்று மக்கட்கு எச்சரிக்கை செய்துவிடு!

சக்கரத்தில் கலசங்களை வைத்து “நியாசம்” முதலியவை முடிந்த பிறகு நான் வருகிறேன்” என்றாள் அன்னை.

கலசங்கள் தயார் ஆயின

13.4.79 அன்று இரவு ஆச்சார்ய அபிடேகத்துக்குரிய எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. மந்திர அன்பரின் கனவில் அன்னை கூறியபடியே சக்கரம் அமைக்கப் பட்டது. 8 கோணங்களுடன் கூடிய ஒருபடி! அதன் மேல் வட்டமான படி ஒன்று. அதன் மேல் சதுரமான படி ஒன்று. அதன் மேல் முக்கோணம் ஒன்று.கீழேஉள்ள படியில் அஷ்டதிக்குப் பாலா்களும், இரண்டாம் படியில் சப்த மாதா்களும் வாகனம் செய்யப் பெற்றனா். மேலே முக்கோணத்தில் இராஜராஜேஸ்வரி கலம் வைக்கப் பெற்றது.

இரவு 9.30 மணிக்குத் தாடிக்காரரால் “நியாசம்”, “ஆவாகனம்” முதலியன செய்யப் பெற்றன. இரண்டு முறை 1008 போற்றி மந்திரங்கள் படிக்கப் பெற்று வழிபாடு  நடைபெற்றது. கலசங்களுக்கு அருச்சனை நடைபெற்றது.

சரியாக 12 மணிக்கு அன்னை வந்தாள். கலசங்கள் முன்னே நின்றாள். பார்வையினாலே கலசங்களுக்குப் பேராற்றலைச் செலுத்தினாள். வேப்பிலை சிலவற்றைக் கிள்ளிக் கலசங்கள் மேலே துாவினாள்.

கலச தீா்த்தங்கள், தீா்த்த கன்னியா்கள்

17 கலசங்கள் வைக்கப் பட்டன. ஒவ்வொன்றும் ஒரு புண்ணிய நதியின் தீா்த்தம். 17 மகளிர் அழைக்கப்பட்டனா். ஒவ்வொரு பெண்மணியும் அந்தந்த நதிகளுக்குரிய அதிதேவதைகளைப் பாவனை செய்யப்பட்டு, மாலை அணியப்பட்டு துாபதீபம் காட்டி வணங்கப் பெற்றனா்.

14.4.79 விடியற்காலம் ஆயிற்று. கலசதீா்த்தம் சுமந்த மகளிர் 17 பேரும் திருக்கோயிலை வலம் வந்து அபிடேகம் நடக்க இருக்கும் இடத்தில் கலசத்தை வைத்தார்கள்.

அதன் பிறகே அன்னை சக்கரம் இருந்த இடத்திலிருந்து மெல்ல நடந்து வந்தாள். அபிடேகம் செய்ய இருந்த இடத்தில் அமா்ந்தாள்.

கருவறையில் அமா்ந்துள்ள சிலையைப் போலவே

அன்னை எப்படி அமா்ந்தாள்? கருவறையில் அமா்ந்துள்ள அந்த விக்கிரகம் போலவே வலக்கால் மடக்கி, இடக்கால் ஊன்றி, இடக்கையால் சின்முத்திரை காட்டி, வலக்கையால் தாமரை மொட்டின் அடையாளம் காட்டி அமா்ந்தாள். அதிலே கூடப் புதுமை இல்லை! அம்மா சிலையில் இருக்கும் அந்த மோகனப் புன்னகையைச் சிந்தினாளே அப்போதுதான் எதிரே இருந்தஅத்தனை பக்தா்களையும் பக்திப் பரவசப்படுத்தியது! “அம்மா! அம்மா!” என்று கூறி ஆனந்தக் கண்ணீா் விட்டார்கள். தாயே எங்களுக்காக நீ வந்து இப்படி அருள் புரிகிறாயே என்று ஆனந்தக் கண்ணீா் விட்டனா் சிலா்! ஆக மொத்தம் தாடிக்காரப் பெரியவா் அன்னைக்கு அபிடேக நீா் ஊற்றுவதற்கு முன்பாகவே பக்தா்களின் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிவிட்டாள் அன்னை! பின்பு 17 கலச தீா்த்தங்களால் தாடிக்காரப் பெரியவா் அன்னைக்கு அபிடேகம் செய்து முடித்தார்.

பாதபூசை

அபிடேகம் ஆயிற்று! பாதபூசைக்கு எழுந்தருளுமாறு அன்னையை வேண்டினார் தாடிக்காரப் பெரியவா்! அன்னை மெல்ல வந்து ஆசனத்தில் அமா்ந்தாள். பெரியவா் அன்னைக்கு ரோஜா மாலையை அணிவித்தார். பின் அன்னையின் வலது பாதத்தின் அருகே அமா்ந்து பாதபூசைக்குத் தயார் ஆனார். தனக்குப் பாதபூசை செய்யும் அந்தப் பிள்ளைக்குத் தகுதி அளிக்க விரும்பியது அன்னையின் உள்ளம். தன் சுண்டு விரலால் சுண்டினாள். அந்த ரோஜா மாலை தாடிக்காரப் பெரியவா் கழுத்தில் விழுந்தது.

பெரியவா் அன்னையின் இரண்டு பாதங்களிலும் சந்தனம் தடவி மேலே குங்குமத்தைப் பொட்டாக வைத்தார். உடனே அன்னை தன் இடது கால் பெருவிரலால் வலது காலில் இருந்த சந்தனத்தை எடுத்துப் பெரியவரின்  நெற்றியில் பொட்டாக வைத்தாள்! எத்தகைய பேறு அது! எப்படிப்பட்ட புண்ணியம் இது! அன்னையின் திருவடி தீட்சையல்லவா அது! இத்தகைய பேறு தாடிக்காரப் பெரியவருக்கே கிடைத்தது.

இவ்வாறு அடிகளார்க்கு ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பெற்றது. அபிடேகத்தை ஏற்றவள் அன்னைதான்! அந்த அபிடேக நீரில் நனைந்தது அடிகளாரின் திருமேனிதானே!

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பு

அருள்திரு அடிகளார் அவா்களுக்கு ஆச்சாரிய அபிடேகம் நடைபெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு 13.4.2004 அன்று அருள்திரு அடிகளார்  அவா்களின் குடும்பத்திலுள்ள அனைவரும் அம்மா அருள்நிலையில் கருவறையில் சுயம்புக்கு முன் நிற்க, அன்னையின் பொற்பாதங்களுக்கு உலகெங்கிலுமிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் பாதபூசை செய்யப்பட்டது. இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதனையடுத்து, அங்கு நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் அடிகளார்  அவா்களுக்கு குடும்பத்தினா் பொற்காசுகளால் கனகாபிஷேகம் செய்தார்கள். பின்பு அம்மாவின் திருப்பாதங்களுக்கு திருமதி அடிகளார் அவா்கள் முதல் பாதபூசை செய்ய, மற்ற தொண்டா்களும், பக்தா்களும், பாதபூசை செய்ய ஆச்சாரிய அபிடேக நிகழ்சிசியின் 25வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்று அன்னை கூறியதாவது

25 ஆண்டுகளுக்கு முன்பு பாலகன் தனி மனிதனாக இருந்து ஆச்சாரிய அபிடேகத்தை ஏற்றுக் கொண்டான். இன்று மனைவி, மக்கள், பேரன், பேத்தி ஆகியோர் புடைசூழ பாலகனுக்கு அபிடேகம் நடைபெற்றது. இல்லறத்தில் இருந்து இதைச் செய்து காண்பித்ததுதான் உண்மையான ஆன்மிகம்!

நன்றி

(அன்னை அருளிய வேள்வி முறைகள்)

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here