நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம்.

நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்குப் போய் வருகின்றோம். சக்திமாலை அணிந்து மருவத்தூர்க்கு வந்து 2001 ஆம் ஆண்டு இருமுடி செலுத்தினோம்.

என் வாழ்வில் அன்னை நடத்திய அற்புதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது இளைய மகன் கார்த்திகன். வயது 9. வழக்கம் போலப் பள்ளிக்குச் சென்றிருந்தான். அங்கு மதியம் இடைவேளை நேரத்தில் அவனோடு படிக்கும் மாணவன் ஒருவன் என் மகன் தலையைப் பிடித்து அழுத்திப் பின்புறமாகத் திருப்பிவிட்டான். இதனால் பின்புறக் கழுத்துப் பகுதியில் கடுமையான வேதனை ஏற்பட்டுக் கழுத்தை அசைக்க முடியாமல் அவதிப்பட்டான். உடனே பள்ளி ஆசிரியா் எனக்குத் தொலைபேசியில் சொல்லியதும் நான் விரைந்து பள்ளிக்குச்
சென்றேன்.

அங்கே டாக்டா் ஒருவா் வந்து பரிசோதனை செய்துவிட்டு, மகனுடைய கழுத்து எலும்பு விலகி விட்டது என்று கூறினார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் வந்திருந்த டாக்டா்கள், “உடனடியாகத் தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அத்துடன் கழுத்துப் பகுதி சிறிதளவும் ஆடாமல், அசையாமல் மிகவும் கவனமாகக் கொண்டு செல்ல வேண்டும்” என்றனா்.

ஆம்புலன்சில் கூட்டிச் சென்றால் கழுத்து அசையப் பார்க்கும். அதனால் ஹெலிகாப்படரில் கொண்டு செல்வதுதான் நல்லது! என்று சிலா் கூறினா்.

உடனே ஹெலிகாப்டா் வரவழைக்கப்பட்டு அதில் என் மகனை மிக மிகக் கவனமாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனா். அங்கு மீண்டும் பரிசோதனை செய்து கழுத்தைச் சுற்றி அசைக்காமல் இருப்பதற்குக் கட்டுப் போடப்பட்டது. அன்றிரவு முழுவதும் நான் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தேன்.

அம்மாவே கதி என இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு இது என்ன சோதனை? என்று வேதனைப்பட்டு விடிய விடிய அம்மாவை வேண்டிக் கொண்டிருந்தேன். என் மகனோ வேதனையால் நீண்ட நேரமாகத் தூங்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தான்.

நள்ளிரவு 1.00 மணி அளவில் மகனின் முனகல் சப்தம் கேட்கவில்லை. உற்று நோக்கினேன். நன்கு தூங்கிவிட்டான். மறுநாள் காலை ஆறுமணிக்கே எழுந்து நின்றான்.

என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. எழுந்ததும் என்னிடம் அவன் கூறினான்.

“அம்மா! இரவு எனக்குக் கழுத்து வேதனையால் தூக்கம் வரவில்லை. அப்போ….. அடிகளார் அம்மா வந்து நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது கையிலிருந்து ஒரு நட்சத்திரம் போல் ஒளி ஒன்று எனது கழுத்திலும், உடம்பிலும் பட்டுச் சென்றது. அதன்பின் எனக்கு வலி
இருக்கவில்லை. அடிகளாரையும் காணவில்லை. அப்படியே கண்ணுக்குள் தூக்கமும் வந்துவிட்டது. தூங்கிவிட்டேன்!” என்று கூறினாள்.

எனக்கோ ஒரே ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. காலை 7.30 மணியளவில் டாக்டா்கள் பரிசோதித்துவிட்டு, “ஆ! எப்படி இவ்வளவு ஆபத்தான நிலைமையில் ஹெலிகாப்படரில் கொண்டு வரப்பட்ட உங்கள் மகன் விலகியிருந்த கழுத்தெலும்பு ஒரே நாளில் சேர்ந்து பழைய நிலைக்குத் திரும்பியது! வேதனையும் இல்லாமல் போய்விட்டதே….” என்று எல்லோருக்கும் ஆச்சரியமும் ஆனந்தமும்!

என்னே அம்மாவின் அற்புதம்! அன்றே நாங்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டோம். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அம்மாவை மறக்கவே முடியாது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. ரஞ்சன், ஜோ்மனி

அவதார புருஷா் அடிகளார், பாகம் 12, பக்கம் (27 -28)

3 COMMENTS

  1. AMMA is all . This miracle is nothing for her. This miracle is really morthan a sky high.
    AMMA i always want to live with u

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here