• மானிடசாதி வாழவேண்டும் என்று ஏன் கூறுகின்றோம்? இப்பொழுதும் அது வாழ்ந்துக் கொண்டுதானே இருக்கிறது. இன்னுஞ் சொல்லப்போனால் மானிடசாதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டல்லவா செல்கிறது! அப்படி இருக்க, அது வாழவேண்டும் என்று கூறுவது பொருத்தமா என்று கூடப் பலர் நினைக்கலாம். உண்மைதான்! மானிடசாதி இன்று எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது; பயப்படும் அளவுக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது! ஆனால் இந்த வளர்ச்சி
    • வாழும் வாழ்க்கை முழுத்தன்மை பெறாவிட்டால் அதனால் பயன் என்ன? பாதிக்கிணறு தாண்டுவது போல இன்றைய மனிதன் அரைப்பங்கு வாழ்க்கைதான் நடத்துகிறான். முழு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் பொருள் சேர்த்து இந்த உலகில் நன்றாக வாழ்வதுடன் மனத்தின் அமைதியைப் பெற்றும் வாழ முற்பட வேண்டும். அந்த அமைதியை நாடி எங்கே செல்வது? பொருள் தேடுவதுபோல் அமைதியை வெளியில் சென்று தேட முடியாது. அவரவர் மனத்தினுள்ளேயேதான் அதனைத் தேட முடியும். ஆன்மிக வாழ்க்கை வாழ முற்பட்டால்தான் அக அமைதி கிட்டும். நற்சிந்தனை, பிறருக்குத் தீங்கு செய்யாமை, உயிர்களிடத்து அன்பு என்பவற்றுடன் இறையன்பும் கலந்து ஒன்றாகும் பொழுது அது ஆன்மிக வாழ்க்கை எனப்படும்.
    • உள்ளார்ந்த வளர்ச்சியா? ஊதுகாமாலைக்காரன் உடல் பருத்துக்கொண்டே வருவதைப் பார்த்து யாராவது மகிழ்ச்சி அடைவார்களா? அது போலத்தான் இன்றைய மானிட சமுதாய வளர்ச்சியும் அமைந்துள்ளது. இன்றைய மனித சமுதாயம் போட்டி நிறைந்த சமுதாயமாக (Competitive Society) மாறிவிட்டது. எப்படியாவது அடுத்தவனை மிஞ்சிவிட வேண்டும் என்ற ஒரே எண்ணம் தலைதூக்கி நிற்கின்றது. அப்படி மிஞ்சிவிட்ட பிறகு இந்த வாழ்க்கையில் அடைய வேண்டியது யாது என்பதை மனிதன் இன்னும் ஆராயவில்லை. இந்தப் போட்டிச் சமுதாயத்தில் எவ்வளவுதான் ஒரு மனிதன் வளர்ந்தாலும் அவனிடம் அமைதி நிலவுகிறதா? மனதில் அமைதி இல்லாதபொழுது எவ்வளவு வளர்ந்தாலும் பயன் என்ன? கோடிக்கணக்கில் பொருளைச் சேர்க்கப் படாதபாடுபடும் மனிதன் அதனைச் சேர்த்துவிட்டு அனுபவிக்கத் தொடங்கும் பொழுது மனநோயையும், உடல்நோயையும் பெற்றுவிடுகிறான். இதனால் பயன் என்ன? இதனை விட்டுவிட்டு இன்றைய மானிடசாதி வளர வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. புற உலகில் வாழ்வது போல மனிதன் அக உலகிலும் மனத்தால் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?புற வாழ்க்கை வளம்பெறச் செல்வம் தேவைப்படுவது போல அகவாழ்க்கை வளம்பெற ஒரு குறிக்கோள் வேண்டும். அந்தக் குறிக்கோளும் ஆன்மிகம் பற்றியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் மனிதனுடைய வாழ்வு முழுத்தன்மை பெற்றதாக இருக்கமுடியும். குத்துச்சண்டை போடுபவனுக்குக் கைகள் வலுவாக இருத்தல் வேண்டும். ஆனால் கால்களில் வலு இல்லையானால் எதிராளி குத்தும் பொழுது அதைத் தாங்கி நிற்க முடியுமா? ஆகவே சிறந்த குத்துச்சண்டைக்காரனாக ஆகவேண்டுமானால் ஒருவன் உடல் முழுவதும் ஒவ்வோர் உறுப்பும் வலுப்பெற்றிருக்க வேண்டும். உடம்புக்குரிய செயல்கட்கே உறுப்புகள் முழுவளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உடம்பும் உயிரும் சேர்ந்து
    • இறையன்பு இல்லாமல் பிற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளக்கூடாதா? என்ற கேள்வி தோன்றலாம். என்னதான் ஒருவன் நற்பண்புகளை வளர்த்தாலும் இறையன்பு என்ற அடிப்படை இல்லையானால் அந்த நற்பண்புகள் நிலைபெறமாட்டா! பிற உயிர்களும் இறைவனின் படைப்பு என்ற எண்ணம் தோன்றும் பொழுதுதான் பிறரிடம் கொள்ளும் வெறுப்பு, கோபம், காழ்ப்புணர்ச்சி என்பவை மறையும். இறையன்பு இல்லையானால் இத்தீய குணங்களை அறவே அகற்றிவிட முடியாது.

      இதனால்தான் ஆன்மிகத்தில் நினைத்த பெரியோர்கள் அனைவரும் இறையன்பில் மிக அழுத்தமாக நின்றனர். அவர்களுடைய நற்பண்புகட்குச் சோதனை வந்தபொழுதெல்லாம் அவர்களுடைய இறையன்பே அவர்களைக் காப்பாற்றியது என்பதை அறிய முடிகிறது. ஆக்கவும், அழிக்கவும் வல்லமை பெற்றிருந்த இப்பெரியோர்கள் தமக்குத் துன்பஞ் செய்தவர்களைக்கூட அழிக்காமல் அத்துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு நன்மையே செய்தனர் என்றால் அது எவ்வாறு முடிந்தது? ஆம்! அவர்கள் கொண்டிருந்த ஆழமான இறையன்பே அவர்களை ஆன்மிகத்தில் திளைக்கச் செய்ததுடன் பிற உயிர்களிடத்தில் நீங்கா அன்பு

      செய்யுமாறும் செய்தது. இப்பெரியோர்களின் வாழ்வு முழுவாழ்வாகும். கேவலம் பணம், பதவி இரண்டும் உடையவர்களைப் பார்த்துப் பார்த்து இவர்கள் வாழ்வுதான் முழுவாழ்வு போலும் என்று ஏமாந்து திரிகின்றது இன்றைய மனித சமுதாயம். அந்தச் சமுதாயம் முழுவாழ்வு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து அதை அடைய எந்த வழியை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிய முற்பட வேண்டும்.

      இவற்றை எல்லாம் அறிய வேண்டுமானால் ஆன்மிகம் பற்றி அறிவதும், அதனை வாழ்க்கையில் மேற்கொள்வதும் மிக மிக அவசியம். இன்றைய உலகம் போகிற போக்கில் மனிதன் தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் முழுவாழ்வு வாழ வேண்டுமானால் சாதி, சமயப் பூசல்களைக் கடந்து, இறையன்புடன் ஆன்மிக வாழ்வை மேற்கொண்டால்தான் அவனுக்கு உய்கதி உண்டு.

      இவற்றை எல்லாம் கருதி மருவத்தூரில் குடிகொண்டு அண்ட பேரண்டங்களையும் ஆட்சி செய்யும் அன்னை ஆதிபராசத்தி இந்த மருவத்தூர் மண்ணில் ஆன்மிக மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு ஆணையிட்டுள்ளாள். மிக விரைவில் கூட உள்ள அந்த மாநாடு மனித சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் நிறைவுக்கும் சரியான வழிகாட்டும் என்பது உறுதி. அதனை எதிர்பார்த்து நம் ஒத்துழைப்பைத் தந்து நாமும் பயன் பெறுவோமாக,

      ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 3-5

    ]]>

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here